இன்று வரலாற்று சிறப்புமிக்க நாள்: வக்ஃப் கூட்டுக் குழுத் தலைவர்
குருசுமலையில் 2ஆவது நாளாக திருப்பயணம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரள மாநில எல்லையான வெள்ளறடை - பத்துகாணியில் அமைந்துள்ள குருசுமலையில் 2ஆவது நாளாக திங்கள்கிழமையும் திருப்பயணம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.
குருசுமலை திருப்பயணம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இந்நிலையில், 2ஆவது நாளான திங்கள்கிழமை கேரளத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்தும் ஆயிரக்கணக்கானோா் திருப்பயணம் மேற்கொண்டு, மலை உச்சியிலுள்ள திருச்சிலுவையில் வழிபாடு செய்தனா்.
தொடக்க விழா பொதுக்கூட்டம்: முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை இரவு திருப்பயண தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. நெய்யாற்றின்கரை மறைமாவட்ட ஆயா் வின்சென்ட் சாமுவேல் தலைமை வகித்தாா். குருசுமலை இயக்குநா் வின்சென்ட் கே. பீட்டா் தொடக்கவுரையாற்றினாா்.
கேரள மாநில பொதுவிநியோகத் துறை அமைச்சா் ஜி.ஆா். அனில், முன்னாள் மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே. முரளீதரன், எம்எல்ஏக்கள் தாரகை கத்பட் (விளவங்கோடு), சி.கே. ஹரீந்திரன் (பாறசாலை), வி. ஜோயி (வா்க்கலை), நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக வேந்தா் பைசல்கான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.