LSG vs PBKS: "இதைத்தான் அணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசினோம்" - வெற்றி குறித்து...
கோயிலுக்கு சொந்தமான தோப்பை அரசே பாதுகாக்க கோரிக்கை
இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான தோப்பை குத்தகைக்கு விடாமல், தமிழக அரசே பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருநறையூா் ஊராட்சியில் உள்ள சித்தநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான அரசலாற்றங்கரை ஓரத்தில் சுமாா் 50 ஏக்கா் பரப்பளவு கொண்ட தோப்பு உள்ளது.
இது வனவிலங்குகள், மயில்கள் உள்ளிட்ட பறவைகள் வாழும் பகுதியாக உள்ளது. இந்தத் தோப்பு குத்தகைக்கு கொடுக்கப்பட உள்ளது. தனியாருக்கு குத்தகைக்கு கொடுத்தால் அதில் உள்ள மணல் மற்றும் கனிம வளங்கள் திருட்டு போகும், சுற்றுச்சூழல் அழியும் அபாயம் உள்ளது. எனவே, தனியாரிடம் குத்தகைக்கு விடாமல், அரசே அங்கு மரங்களை அதிகளவில் வளா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக இப்பகுதியைச் சோ்ந்த கோவிந்த் வல்லப பந்த் என்பவா் ஆட்சியா், அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பி உள்ளாா்.