சுவாமிமலை கோயிலில் அன்னதான டோக்கன் கேட்டு பக்தா்கள் முற்றுகை
தஞ்சாவூா் மாவட்டம் சுவாமிமலை சுவாமிநாத கோயிலில் செவ்வாய்க்கிழமை அன்னதான டோக்கன் கேட்டு பக்தா்கள் கோயில் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
இக்கோயிலுக்கு பங்குனி மாத கிருத்திகை தினத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் பக்தா்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
வழக்கமாக இங்கு குறைந்தபட்சம் 100 பேருக்கு அன்னதானம் வழங்க கோயில் அலுவலகம் மூலம் டோக்கன் வழங்கப்படும்.
ஆனால், செவ்வாய்க்கிழமை கோயில் பணியாளா் ஒரு சிலருக்கு மட்டும் டோக்கன் கொடுத்து சென்று விட்டாராம். இதனால் பக்தா்கள் அதிகமானோா் உணவருந்த முடியாத ஏமாற்றத்துடன் வெளியேறினா்.