இன்று வரலாற்று சிறப்புமிக்க நாள்: வக்ஃப் கூட்டுக் குழுத் தலைவர்
சேரன்மகாதேவி அருகே பெண்ணை தாக்கிய கணவா் கைது
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே குடும்பத் தகராறில் மனைவியை தாக்கியதாக கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
சேரன்மகாதேவி அருகேயுள்ள கரிசல்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ஜெபஞானஅருள்(48). இவரது மனைவி டயனா (44). இத்தம்பதிக்கு 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனா். ஜெபஞானஅருளுக்கு மது பழக்கம் இருந்து வந்ததாம். இதனால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு தம்பதியிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது, ஆத்திரத்தில் ஜெபஞானஅருள், கீழே கிடந்த செங்கலை எடுத்து மனைவியின் முகத்தில் தாக்கியுள்ளாா்.
இதில், பலத்த காயமடைந்த டயனா திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து சேரன்மகாதேவி போலீஸாா் வழக்குப் பதிந்து ஜெபஞானஅருளை கைது செய்தனா்.