MI vs KKR: கொல்கத்தாவை வாரிச் சுருட்டிய 23 வயது அறிமுக பவுலர்; வெற்றிக் கணக்கைத்...
CSK vs RCB: `சேப்பாக்கத்தில் ஹோம் க்ரவுண்ட் சாதகம் இல்லவே இல்லை’ - தோல்விக்குப் பின் ஃப்ளெமிங்
ஐபிஎல் 2025-ல் நேற்று நடந்த சி.எஸ்.கே vs ஆர்.சி.பி போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை அணியை சேப்பாக்கம் மைதானத்தில் வீழ்த்தியுள்ளது பெங்களூரு அணி.
இந்த நிலையில் தங்களுக்கு சேப்பாக்கம் மைதானத்தில் ஹோம் க்ரவுண்ட் அட்வான்டேஜ் எதுவும் இல்லை எனப் பேசியுள்ளார் அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங்.
நேற்றைய போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி விளையாடியது RCB அணி, 7 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் குவித்தது. ஆனால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழந்த CSK அணியால் 146 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ஆர்.சி.பி அணி.
சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங், பெங்களூரு அணியை 175 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியிருந்தால் போட்டி கட்டுப்பாட்டில் இருந்திருக்கும் என்று கூறியுள்ளார்.
கடுப்பான ஃப்ளெமிங்
மேட்ச்சுக்குப் பிறகு இறுக்கமான முகத்துடன் பத்திரிகையாளர்களை சந்தித்த ஃப்ளெமிங், "நாங்கள் வெற்றிபெற பாதி வாய்ப்புகள் இருந்தன. அவை கொஞ்சம் குழப்பமாக இருந்தன. அவர்கள் எங்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடினார்கள். ஆனால் உண்மையாகவே போட்டியை எங்களுக்கு சாதகமாக மாற்ற வாய்ப்புகள் இருந்தன. ஆனால் நாங்கள் அவற்றை விட்டுவிட்டோம்.
175 ரன்கள் யதார்த்தமாக இருந்திருக்கும். ஆனால் நாங்கள் அவ்வளவு நன்றாக விளையாடவில்லை." என்று பேசினார்.
சொந்த மைதான சாதகம் இல்லை
மேலும் அவர் சேப்பாக்கம் பிட்சை சரியாக கணிக்க முடியாததால் எந்தவித சொந்த மைதான சாதகமும் இல்லை என்று பேசியுள்ளார்.

"எங்களுக்கு ஹோம் க்ரவுண்ட் சாதகங்கள் எதுவும் இல்லை என்பதை சில ஆண்டுகளாகவே சொல்லி வருகிறோம். நாங்கள் சில வெளியிடப் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளோம். ஆனால் எங்களால் இந்த பிட்சை கணிக்க முடியவில்லை.
இதில் மிக நேர்மையாக இருக்கிறோம். கடந்த இரண்டு வருடங்களாக விக்கெட்டுகளைப் பற்றி எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.
எனினும் இது எங்களுக்கு புதிய பிரச்னை அல்ல. நாங்கள் வரும் பிரச்னைகளை சமாளிக்க முயல்கிறோம். ஆனால் எப்போதுமே, எதை எதிர்பார்ப்பது என்று தெரியாமல் விளையாடுவது மிகவும் கடினமாக இருக்கிறது.
இது பழைய சேப்பாக் அல்ல, நான்கு ஸ்பின் பவுலர்களை வைத்து விளையாடுவதற்கு. ஒவ்வொரு பிட்ச்சின் தன்மையையும் கணிப்பதற்கு நாங்கள் கடினமாக முயற்சி செய்ய வேண்டியிருக்கிறது. இதுமிகவும் வித்தியாசமானது." என்று கூறியுள்ளார்.
எங்கள் அணிக்கு சக்தி இருக்கிறது
மோசமான பேட்டிங் பற்றிய பத்திரிகையாளரின் கேள்விக்கு கோபமாக பதிலளித்த அவர், "எங்களால் செய்ய முடிந்தது எங்களை இன்னும் சிறப்பாக்கிக்கொண்டு, என்ன எதிர்வந்தாலும் களத்தில் நின்று சண்டையிடுவதை உறுதி செய்வதுதான்.
எல்லாரும் சொல்வதை நான் ஏற்றுக்கொள்வதில்லை. எங்கள் அணி முழுவதும் அபாரமான சக்தி இருக்கிறது. செய்ய வேண்டியதெல்லாம் சரியான வாய்ப்புகளை உருவாக்குவதுதான்.
நாங்கள் முதல் பந்திலிருந்தே ஸ்விங் செய்யாததாலோ அல்லது எங்கள் வழியில் கொஞ்சம் அதிர்ஷ்டம் வர நினைப்பதாலோ சிறப்பாக விளையாட மாட்டோம் என்று அர்த்தமல்ல, தொடரின் இறுதியில் அணி எங்கு முடிக்கிறது என்பதை பார்ப்போம். எங்களை குறைத்து மதிப்பிடாதீர்கள்." என பதிலளித்தார்.
தோனி பற்றிய கேள்விக்கு தோனி கடுமையாக பயிற்சி செய்வதாகவும், சரியான ஃபிட்னஸுடன் இருப்பதாகவும் கூறினார்.