இந்தியா-சீனா ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும்: அதிபர் ஷி ஜின்பிங்
RR vs CSK: 'எனது உள்ளுணர்வின் அடிப்படையில் கேப்டன்சி முடிவுகளைச் செய்தேன்' - கேப்டன் ரியான் பராக்
அஸ்ஸாமின் கவுஹாத்தி மைதானத்தில் நேற்று(மார்ச் 30) நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை அணிகளுக்கிடையேயானப் போட்டியில் 6 ரன் வித்யாசத்தில் ராஜஸ்தான் அணி சென்னையை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறது.
அணியின் வெற்றி குறித்து கேப்டன் ரியான் பராக் பேசியிருக்கிறார். "இந்த முதல் வெற்றிக்கு நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. இரண்டு போட்டிகளில்தான் நாங்கள் தோல்வி அடைந்தோம் என்றாலும், அது மிகவும் நீண்ட நாட்கள் போல தோன்றுகிறது.

நாங்கள் நடு ஓவர்களில் அதிரடியாக பேட்டிங் ஆடினோம். ஆனால், சில விக்கெட்டுகளை அப்போது இழந்தோம். அதன் பின் நாங்கள் பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்டோம். பந்துவீச்சாளர்கள் ஒன்றாக இணைந்து எங்கள் திட்டங்களைச் செயல்படுத்தினார்கள்.
இரண்டு கடினமான ஆட்டங்களில் நாங்கள் ஆடி இருந்தோம். முதல் போட்டியில் சுமார் 280 ரன்களை நாங்கள் சேஸிங் செய்ய முயன்றோம். இரண்டாவது போட்டியில் 180 ரன்களை எங்களால் எட்ட முடியவில்லை.

ஆனால், இந்தப் போட்டியில் எங்களுக்கு சில வாய்ப்புகள் இருந்தன. நானும், நிதீஷ் ராணாவும் அதிரடியாக ஆடினோம். இன்று எனது உள்ளுணர்வின் அடிப்படையில் கேப்டன்சி முடிவுகளைச் செய்தேன்" என்று தெரிவித்திருக்கிறார்.