இந்தியா-சீனா ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும்: அதிபர் ஷி ஜின்பிங்
Dhoni : `தோனியால 10 ஓவருக்கு பேட்டிங் ஆட முடியாது' - ஃப்ளெம்மிங் சொல்வதென்ன?
'தோனி மீது விமர்சனம்!'
ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது. தொடர்ச்சியாக சென்னை அணி அடையும் இரண்டாவது தோல்வி இது. சமீபமாக பேட்டிங்கில் தோனி இறங்கும் ஆர்டர் சம்பந்தமாக பலத்த விமர்சனங்கள் எழுந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ப்ளெம்மிங் இதுபற்றி விளக்கமாக பேசியிருக்கிறார்.
'ஃப்ளெம்மிங் விளக்கம்!'
பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், ''நேரத்தையும் சூழலையும் பொறுத்துதான் தோனியின் ஆர்டர் முடிவாகிறது. இதில் அவர்தான் முடிவெடுக்கிறார். தோனியின் உடற்தகுதியும் முழங்காலும் முன்பு போல இல்லை. அவர் களத்தில் துடிப்பாகத்தான் செயல்படுகிறார். ஆனாலும் அவருக்கு முழங்காலில் நீண்ட நாட்களாக பிரச்னை இருக்கிறது. அவரால் 10 ஓவர்களுக்கு நின்று பேட்டிங் ஆடி ஓடி ஓடி ரன்கள் சேர்க்க இயலாது.

அதனால் போட்டி நடக்கும் அன்றைய நாளில் அவரால் எதை சிறப்பாக கொடுக்க முடியுமோ அதை கொடுக்க முயல்கிறார். ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியை போல போட்டி சமநிலையில் இருந்தால், அவர் கொஞ்சம் மேலே வருவார். இல்லையே மற்ற வீரர்களின் மீது நம்பிக்கை வைத்து அவர்களுக்கு வாய்ப்பளிக்க விரும்புகிறார். நான் கடந்த சீசனிலேயே சொல்லியிருக்கிறேன்.
விக்கெட் கீப்பிங்கிலும் தலைமைத்துவத்திலும் அவர் எங்களுக்கு ரொம்பவே மதிப்புமிக்க வீரர். 9-10 ஓவர்களிலேயே அவரை இறக்க முடியாது. 13-14 ஓவர்களுக்குப் பிறகு சூழலைப் பொறுத்து அவர் இறங்குவார்.' என்றார்.