MI vs KKR: கொல்கத்தாவை வாரிச் சுருட்டிய 23 வயது அறிமுக பவுலர்; வெற்றிக் கணக்கைத்...
மியான்மரில் நிலநடுக்கம்: தாயகம் திரும்பிய இந்திய பயணிகள்!
மியான்மரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பாங்காக்கில் இருந்து இந்திய பயணிகள் தாயகம் திரும்பினர்.
மியான்மர் மட்டுமல்லாது தாய்லாந்து, வியட்நாம், சீனாவிலும் உணரப்பட்ட நில அதிர்வுகளால் மேற்கண்ட நாடுகளில் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்Laன. இந்தநிலையில், தாய்லாந்தின் பாங்கக் நகரிலிருந்து இந்திய பயணிகள் பலர் விமானம் மூலம் புது தில்லி விமான நிலையத்துக்கு சனிக்கிழமை(மார்ச் 29) வந்தடைந்தனர்.
இதனிடையே, தில்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய பயணிகள் பலரும், நிலநடுக்கம் ஏற்பட்ட வெள்ளிக்கிழமை(மார்ச் 28) பாங்காக்கில் உணவு, தண்ணீர், கால் டாக்ஸி கிடைக்காமல் தாங்கள் மிகுந்த சிரமப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். எனினும், நல்லபடியாக தாங்கள் தாயகம் திரும்பியதற்கு கடவுளுக்கு நன்றி தெரிவிக்கிறோம் என்றும் அவர்கள் கூறினர்.