வடிவேலுவின் கேங்கர்ஸ் டிரைலர்: யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம்!
எல்லையைக் கடந்து பரவும் தொற்றினால் 10 லட்சம் பேருக்கு ஆபத்து! காப்பாற்றுமா அரசின் திட்டம்!
கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் வேகமாகப் பரவி வரும் காலரா நோயினால் சுமார் 10 லட்சம் பேர் அபாயத்திலுள்ளதாகக் கூறப்படுகின்றது.
தெற்கு சூடான் நாட்டுடனான எல்லையில் எத்தியோபியாவின் தென் மேற்கிலுள்ள காம்பெல்லா மாகாணத்தின் அகோபோ மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் முறையாக காலரா நோய் தொற்றானது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தற்போது அம்மாகாணத்தில் எட்டு மாவட்டங்கள் மற்றும் 4 அகதிகள் முகாம்களில் பரவியுள்ள காலரா தொற்றை உடனடியாகத் தடுக்க, உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட மனிதாபிமான அமைப்புகள் வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில், காம்பெல்லா பகுதி மற்றும் அங்குள்ள அகதிகள் முகாமில் வாழும் மக்களுக்கு காலரா தொற்று ஏற்படக் கூடிய அபாயமுள்ளதாகக் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்நாட்டு அரசு சுமார் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்து திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, கடந்த மார்ச் 30 அன்று எத்தியோப்பியாவின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருந்த அறிக்கையில் காம்பெல்லா மாகாணத்தின் அனைத்து மண்டலங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணியானது வரும் வாரம் முழுவதும் மேற்கொள்ளப்படும் எனக் கூறப்பட்டிருந்தது.
அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் மெக்தெஸ் தாபா கூறுகையில், இந்த நோயைத் தடுக்க மக்கள் அனைவரும் காலரா தடுப்பூசி செலுத்துவதுடன் சுற்றுச்சூழல் மற்றும் தனிமனித சுத்ததைக் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
இருப்பினும், எத்தியோபியாவின் அண்டை நாடான தெற்கு சூடானில் கடந்த 2024 ஆம் அண்டு முதல் காலரா நோய் தொடர்ந்து பரவி வருகின்றது. மேலும், அந்நாட்டில் அரசுக்கும் கிளர்ச்சிப்படைகளுக்கு இடையிலான மோதலினால் ஏராளமான மக்கள் தெற்கு சூடானை விட்டு வெளியேறி எத்தியோப்பியாவில் தஞ்சமடைந்து வருகின்றனர்.
இதனால், தற்போது அந்நாட்டில் பரவி வரும் புதிய அலையானது மேல் நைல் மாநிலத்தைக் கடந்து எத்தியோப்பியாவின் காம்பெல்லாவில் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:பலியாகப் போகும் 3 லட்சம் பேர்? ஜப்பானுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து!