வடிவேலுவின் கேங்கர்ஸ் டிரைலர்: யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம்!
வீர மகாகாளியம்மன் கோயிலில் திருநடனத் திருவிழா: திரளானோர் பங்கேற்பு!
வீர மகாகாளியம்மன் கோயிலில் 56-ஆம் ஆண்டு திருநடனத் திருவிழா, படுகளம் பார்த்தல் நிகழ்வு நடைபெற்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வங்காரம்பேட்டையில் வீரமகா காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு 56-ஆம் ஆண்டு திருநடன திருவிழா மற்றும் படுகளம் பார்த்தல் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக
கணபதி ஹோமம், அக்னி எல்லை வலம் வருதல், கரகம் காவடி பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து ஸ்ரீ துர்க்கை அம்மன் எல்லை வலம் வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, வீரமகா காளியம்மன் படுகளம் பார்த்தல் நிகழ்ச்சி கோயில் அருகில் உள்ள மைதானத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து அம்மன் வீதியுலாவும் நடைபெற்றது. வீதிகளில் நடனமாடி வந்த காளியம்மனை அப்பகுதி மக்கள் தங்கள் இல்லங்களில் அமரவைத்து பழங்கள் இளநீர் மாவிளக்கு வைத்து தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். இதில் பாபநாசம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.