செய்திகள் :

திட்டங்களை தெளிவாக செயல்படுத்திய மும்பை இந்தியன்ஸ்; பாராட்டிய நியூசி. வீரர்!

post image

மும்பை இந்தியன்ஸ் அதனுடைய திட்டங்களை தெளிவாக செயல்படுத்தி முதல் வெற்றியைப் பெற்றுள்ளதாக நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் பாராட்டியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, நடப்பு ஐபிஎல் தொடரில் தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கியது.

இதையும் படிக்க: மதிய உணவு உண்ணாமல் விளையாடிய அஸ்வனி குமார்..! பாண்டியாவின் அறிவுரையால் கிடைத்த விக்கெட்!

மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய அஸ்வனி குமார் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அறிமுகப் போட்டியில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். பேட்டிங்கில் அதிரடியாக விளையாடிய ரியான் ரிக்கல்டான் அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 41 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். 117 ரன்கள் என்ற எளிய இலக்கை மும்பை இந்தியன்ஸ் அணி 12.5 ஓவர்களில் எட்டி கொல்கத்தாவை வீழ்த்தியது.

கேன் வில்லியம்சன் பாராட்டு

கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தி தனது வெற்றிக் கணக்கை தொடங்கிய நிலையில், ஆட்டம் முழுவதையும் மும்பை இந்தியன்ஸ் அணி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததாக நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் பாராட்டியுள்ளார்.

கேன் வில்லியம்சன்

இதையும் படிக்க:ஒவ்வொரு போட்டியிலும் 1% முன்னேற விரும்புகிறேன்: அர்ஷ்தீப் சிங்

இது தொடர்பாக ஜியோஹாட்ஸ்டாரில் கேன் வில்லியம்சன் பேசியதாவது: மும்பை இந்தியன்ஸ் அணி ஆட்டம் முழுவதும் சிறப்பாக செயல்பட்டார்கள். டாஸ் வென்றது, பந்துவீச்சைத் தேர்வு செய்தது, கூடுதல் வேகப் பந்துவீச்சாளராக அஸ்வனி குமாரை அணிக்குள் கொண்டு வந்தது என அவர்களது திட்டங்கள் அனைத்தையும் அழகாக செயல்படுத்தினார்கள். மும்பை இந்தியன்ஸ் அணி சீரான இடைவெளிகளில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை வீழ்த்தியது சிறப்பான விஷயம் என நினைக்கிறேன். எதிரணியை பார்ட்னர்ஷிப் அமைக்க அவர்கள் விடவில்லை. ஆட்டம் முழுவதையும் மும்பை இந்தியன்ஸ் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் என்றார்.

7 ரன்களுக்கு ஆட்டமிழந்த கோலி: ரசிகர்கள் அதிர்ச்சி!

ஆர்சிபியின் சொந்த மண்ணில் விராட் கோலி 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஐபிஎல் போட்டியின் 14-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று (ஏப். 2) சின்னசாமி திடலில் மோதுகின்றன... மேலும் பார்க்க

சொந்த மண்ணில் லக்னௌ தோல்வி: சஞ்சீவ் கோயங்கா கூறியதென்ன?

லக்னௌ அணி தனது சொந்த மண்ணில் தோல்வியடைந்தது குறித்து அதன் நிறுவனத் தலைவர் சஞ்சீவ் கோயங்கா தனது எக்ஸ் பக்கத்தில் விடியோ வெளியிட்டுள்ளார். கடந்த 2022இல் இருந்து லக்னௌ அணி ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறத... மேலும் பார்க்க

ஆர்சிபி பேட்டிங்: குஜராத் அணியில் ரபாடா விலகல்!

ஐபிஎல் போட்டியின் 14-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று (ஏப். 2) சின்னசாமி திடலில் மோதுகின்றன. இதில் ஆர்சிபிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்... மேலும் பார்க்க

எதிரணிக்கு சாதகம்: பிட்ச் மேற்பார்வையாளரை குற்றம் சுமத்தும் லக்னௌ ஆலோசகர்!

ஐபிஎல் 18ஆவது சீசனில் 13-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜெயன்ட்ஸை நேற்று (திங்கள்கிழமை) சாய்த்தது.முதலில் பேட்டிங் செய்த லக்னௌ அணி 20 ஓவா்களில் 171/7 ... மேலும் பார்க்க

தோனியை முந்திய ஷ்ரேயாஸ் ஐயர்! ஐபிஎல்லில் தொடர் வெற்றிகள்!

சென்னை முன்னாள் கேப்டன் தோனியை முந்தி பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் புதிய சாதனையைப் படைத்துள்ளார். 18-வது ஐபிஎல் தொடரின் 13-வது போட்டியில் பஞ்சாப் - லக்னௌ அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 8 விக்கெட் வி... மேலும் பார்க்க

எதிரணி வீரரிடம் கையெழுத்து கொண்டாட்டம்: லக்னௌ வீரருக்கு 25% அபராதம்!

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் திக்வேஷ் ரதிக்கு 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.ஐபிஎல் போட்டியின் 13-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜெயன்ட்ஸை செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க