நிதியாண்டின் முதல் நாளில் கடும் சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை!
2025-26 நிதியாண்டின் முதல் வர்த்தக நாளான இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் தொடங்கியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்துள்ள வரி நாளை முதல் அமலுக்கு வருவதால் உலகளாவிய சந்தைகளில் நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது.
இதையும் படிக்க : தங்கம் விலை அதிரடி உயர்வு: ரூ. 68,000-ஐ கடந்தது!
இன்றைய வர்த்தக நேரம் தொடங்கியவுடன் நிஃப்டி 178 புள்ளிகள் சரிந்து 23,341 ஆகவும், சென்செக்ஸ் 536 புள்ளிகள் சரிந்து 76,878 ஆகவும் வர்த்தகமானது.
காலை 10. 30 நிலவரப்படி நிஃப்டி 23,292.25 புள்ளியாகவும் சென்செக்ஸ் 76,511.96 புள்ளியாகவும் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றது.