இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் விலகு...
டிமான்ட்டி காலனி - 3 பணிகள் துவக்கம்!
டிமான்ட்டி காலனி - 3 படத்திற்கான பணிகள் துவங்கியுள்ளன.
திகில் கதையை மையமாக வைத்து கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் டிமாண்டி காலனி. இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கிய இந்தத் திரைப்படத்தில் நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருந்தார்.
விறுவிறுப்பான திரைக்கதை ஓட்டத்தால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படமானது வசூல் ரீதியாகவும் வெற்றிப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து, அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவான டிமாண்டி காலனி 2 திரைப்படம், கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றதுடன் ரூ. 80 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

இந்த நிலையில், டிமான்ட்டி காலனி - 3 பாகத்தின் பணிகளைத் துவங்கியுள்ளதாக இயக்குநர் அஜய் ஞானமுத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட புகைப்படத்தில் ஐரோப்பிலுள்ள மால்டா என்கிற நாட்டில் இருப்பதைக் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், இப்படம் ஐரோப்பாவை மையமிட்டு உருவாகலாம் எனத் தெரிகிறது.
இதையும் படிக்க: கார் பந்தயங்களை முடித்த அஜித் வீடு திரும்பினார்!