தமிழக பாஜக தலைவர் ரேஸில் முந்தும் நயினார் நாகேந்திரன்? - உச்ச கட்டத்தில் கமலாலய ...
‘என் மன்னன் எங்கே?’ பாரதிராஜாவை ஆறுதல்படுத்திய கங்கை அமரன்!
இயக்குநர் பாரதிராஜாவைச் சந்தித்த கங்கை அமரன் பாடல்கள் பாடி ஆறுதல்படுத்தினார்.
இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் குமார் சில நாள்களுக்கு முன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவிற்கு தமிழக முதல்வர், நடிகர் விஜய் உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரில் சென்று பாரதிராஜாவுக்கு ஆறுதல் அளித்தனர்.
இந்த நிலையில், இயக்குநரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் மகனை இழந்துவாடும் பாரதிராஜாவை நேரில் சந்தித்து இருவருக்கும் இடையேயான பழைய நினைவுகளைப் பகிர்ந்ததுடன் பாரதிராஜா படங்களில் தான் பாடிய பாடல்களை பாடினார்.
இதை அமைதியாகக் கேட்டபடி பாரதிராஜா அமர்ந்திருந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இதையும் படிக்க: டிமான்ட்டி காலனி - 3 பணிகள் துவக்கம்!