செய்திகள் :

தங்களின் சொத்து விவரங்களை பொது வெளியில் வெளியிட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒப்புதல்! - முழு விவரம்

post image

நீதிபதிகளின் செயல்பாடுகளின் வெளிப்படை தன்மை குறித்து எப்பொழுதும் கேள்வி எழுப்பப்பட்ட வந்திருக்கிறது. குறிப்பாக அவர்களது சொத்து விவரங்கள் சம்பந்தமாக அவ்வப்போது சர்ச்சைகள் எழுவதும், பிறகு அது குறித்து விசாரணைக்கு உத்தரவிடுவது என்பது தொடர்கதையாகவே நீதித்துறையில் இருந்து வருகிறது.

இதனை சரி செய்யும் வகையில் 1997இல் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தங்களது சொத்து விவரங்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டிருந்தது.

அதற்குப் பிறகு 12 ஆண்டுகள் கழித்து 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் தேதி எடுக்கப்பட்ட முடிவின் படி உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சொத்து விவரங்களை பொதுவெளியில் வெளியிட முடிவு செய்யப்பட்டது. ஆனாலும் அது கட்டாயமாக அல்லாமல் விருப்பத்தின் பெயரிலேயே இருந்து வந்தது.

உச்ச நீதிமன்றம்

`வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில்’

இதற்கிடையில் கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் நடைபெற்ற அனைத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், உச்ச நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகள் அனைவரும் தங்கள் சொத்துக்களை பொதுமக்கள் அறியும் வகையில் உச்ச நீதிமன்ற இணையதளத்தில் பகிரங்கமாக அறிவிக்க ஒப்புக் கொண்டுள்ளனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறித்த வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் நீதிபதிகளின் சொத்து விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்த தீர்மானம் எதிர்காலத்தில் பணிக்கு வரும் அனைத்து நீதிபதிகளுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில வாரங்களுக்கு முன்பு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஸ்வந்த் வர்மாவின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டபோது கட்டு கட்டாக ரொக்க பணம் கைப்பற்றப்பட்டதும், அதற்குப் பிறகு அவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதும் பெரும் சர்ச்சையான நிலையில், நீதி துறையின் நேர்மை குறித்து பலத்த கேள்விகள் அனைத்து தரப்பிலிருந்தும் எழுப்பப்பட்டது. இதனை சரி செய்யும் வகையில் உச்ச நீதிமன்றம் தற்போது இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.

விருப்ப அடிப்படையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் மற்ற நீதிபதிகள் தங்களது சொத்து விவரங்களை சமர்ப்பிப்பார்கள் என்றும் பிறகு அது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்றும் நீதிபதிகள் பதவியேற்பதற்கு முன்பாக அதற்குப் பிறகான அவர்களது சொத்து விவரங்கள் முழுமையாக வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடு ஜப்தி வழக்கு : `சகோதரர் ராம்குமார் கடனுக்கு உதவ முடியாது’ - உயர் நீதிமன்றத்தில் பிரபு தரப்பு

நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் விஷ்ணு விஷால், நடிகை நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடிப்... மேலும் பார்க்க

Chennai: `வணிக வளாகம் பார்க்கிங் கட்டணம் வசூலிக்க கூடாது' -VR மால் வழக்கில் நுகர்வோர் ஆணையம் உத்தரவு

சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், திருமங்கலத்தில் செயல்படும் வி.ஆர் வணிக வளாகம் இனி பார்க்கிங் கட்டணம் வசூல் செய்யக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த நபர் அளித்த புகாரின் அ... மேலும் பார்க்க

மதுரை: இழப்பீடு தராமல் 50 ஆண்டுகள் இழுத்தடிப்பு; கலெக்டரின் காரை ஜப்தி செய்ய வந்தவர்களால் பரபரப்பு

நிலத்தை எடுத்துக்கொண்டதற்கு 50 ஆண்டுகளாக உரிய இழப்பீட்டை வழங்காததால் நீதிமன்ற உத்தரவுப்படி பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டரின் காரை கயிறு கட்டி இழுத்துச் செல்ல முயன்ற சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்திய... மேலும் பார்க்க

`மனிதாபிமானமற்ற அணுகுமுறை...' - அலஹாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பை நிறுத்திவைத்த உச்ச நீதிமன்றம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை முயற்சி வழக்கில், "மார்பகத்தைப் பிடிப்பதையோ... அல்லது பைஜாமாவின் கயிற்றை அவிழ்ப்பதையோ பாலியல் வன்கொடுமை முயற்சியாக கருத முடியாது. அதனை பாலியல் ... மேலும் பார்க்க

"திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் சொந்தமானது" - சென்னை உயர் நீதிமன்றம் கூறியதன் பின்னணி என்ன?

தொல்லியல் துறையினர், திருப்பரங்குன்றம் மலை தங்களுக்குச் சொந்தமானது என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.மதுரையைச் சேர்ந்த சோலைக்கண்ணன், வழக்கறிஞர் முத்து... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜி: `நீங்கள் சொல்லும் தேதியில் எல்லாம் ஒத்தி வைக்க முடியாது’ - காட்டமான உச்ச நீதிமன்றம்

அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக ஏராளமான நபர்களிடம் லஞ்சம் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய... மேலும் பார்க்க