தமிழ்நாட்டில் அதிவேக டேட்டாவை வழங்குகிறது ஜியோ! காரணம் என்ன?
மற்ற நிறுவனங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் அதிவேக இணைய சேவையை ஜியோ நிறுவனம் வழங்குகிறது.
இதற்குக் காரணம், ஜியோ நிறுவனம் தனது அலைதிறனை மேம்படுத்தியதுதான் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அதாவது, 5ஜி இணைய சேவைக்கு 3.3 ஜிகாஹெர்ட்ஸ் பேண்ட் அலைவரிசையே தேவையானதாக உள்ள நிலையில், ஜியோ நிறுவனம் 26 ஜிகாஹெர்ட்ஸ் திறனுடன் இணைய சேவையை மேம்படுத்தியுள்ளது.
இவை பெரும்பாலும் தனிநபர்களுக்கான பயன்பாட்டில் பொருந்துவதில்லை; பெரு நிறுவனங்கள் மட்டுமே இத்தகைய அடர்த்தியான அலைவரிசையுடைய இணைய சேவையைப் பயன்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன.