Parliament ; Assembly : அனல் பறந்த விவாதங்கள்! | விரக்தியில் Annamalai BJP | Imp...
கூகுள் பிக்சலுக்கு இணையாக ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்!
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான 13 டி இம்மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பை ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் தயாரிப்புகள் மீது பிரியம் கொண்ட பயனர்களுக்கு இம்மாதம் மகிழ்ச்சியான செய்தி வெளியாகும் என்பது உறுதியாகியுள்ளது.
சீனாவின் குவாங்டொங் மாகாணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒன்பிளஸ் நிறுவனம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு டி - வரிசையில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது.
இறுதியாக 10 டி என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திருந்தது. அமெரிக்காவில் சிறப்பு ஏற்பாடுகள் செய்து இந்த ஸ்மார்ட்போனை ஒன்பிளஸ் வெளியிட்டிருந்தது.
(OnePlus 13T) ஒன்பிளஸ் 13 டி - என்ன சிறப்பு?
ஒன்பிளஸ் 13 டி ஸ்மார்ட்போனானது, 6.3 அங்குல சமதள திரையுடன் 1.5K திறன் கொண்டது. 6200mAh திறனுடைய பேட்டரியுடன் அதிவேக சார்ஜிங் அம்சமும் (80W) இணைக்கப்பட்டுள்ளது.
ஸ்நாப்டிராகன் 8 எலைட் எஸ்.ஓ.சி. இயங்குதளம் கொண்டுள்ளதால், அதிக திறன் கொண்ட விளையாட்டுகளையும் இதில் எந்தவித தடையுமின்றி விளையாட முடியும். இதனால் மின்கலனோ அல்லது இயங்குதளமோ சேதாரமடையாது.
கூகுள் பிக்ஸல் 9 தயாரிப்பின் புற வடிவத்தை தழுவி ஒன்பிளஸ் 13 டி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமின்றி பின்புறம் உலோகத்தால் (மெட்டல்) ஆன வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் பார்வைக்கு பிரீமியம் ஸ்மார்ட்போன் உணர்வை ஏற்படுத்தக்கூடியது.
ஒன்பிளஸ் 11 மாடலில் வரிசையாக அடுத்தடுத்த ஸ்மார்ட்போன்களை ஒன்பிளஸ் அறிமுகம் செய்தது. அதன் பிறகு ஒன்பிளஸ் 13 மாடல் வரிசைகளுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.