டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ.85.52-ஆக முடிவு!
மும்பை: வர்த்தக கட்டணங்கள் மீதான நிச்சயமற்ற தன்மையால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று 2 காசுகள் சரிந்து ரூ.85.52 ஆக நிலைபெற்றது.
டிரம்பின் பரஸ்பர கட்டண கவலைகள் மற்றும் அந்நிய நிதி வெளியேற்றம் ஆகிய காரணங்களால் இந்திய ரூபாய் 2025-26 ஆண்டின் முதல் வர்த்தக அமர்வில் தட்டையான குறிப்புடன் முடிந்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில் கச்சா எண்ணெய் விலை உயர்வும், இந்திய ரூபாயின் மீதான அழுத்தத்தை அதிகரித்ததுள்ளது.
இருப்பினும், உள்நாட்டு சந்தைகளில் உள்ள நேர்மறையான போக்கும், டாலரின் பலவீனமான மதிப்பும் இந்த சரிவைத் தணித்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.65 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், இது அதிகபட்சமாக ரூ.85.50 ஆகவும், பிறகு குறைந்தபட்சமாக ரூ.85.73 ஐ தொட்ட நிலையில், முடிவில் 2 காசுகள் சரிந்து ரூ.85.52 ஆக முடிந்தது.
இதையும் படிக்க: பரஸ்பர வரி அறிவிப்புக்கு முன்னதாக சென்செக்ஸ், நிஃப்டி கிட்டத்தட்ட 1% உயர்வு!