ஐக்யூ நிறுவனத்துக்குப் போட்டியாக ரியல்மி! ஏப். 9-ல் 2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்!
ரியல்மி நிறுவனத்தின் இரு புதிய ஸ்மார்ட்போன்கள் ஏப். 9ஆம் தேதி அறிமுகமாகின்றன.
நர்ஸோ வரிசையில் ரியல்மி நர்ஸோ 80 ப்ரோ மற்றும் நர்ஸோ 80எக்ஸ் ஆகிய இரு போன்கள் இந்தியாவில் அறிமுகமாகின்றன.
இந்த இரு ஸ்மார்ட்போன்களும் ரியல்மி நர்ஸோ 70 ப்ரோ, நர்ஸோ 70எக்ஸ் ஆகிய இரு ஸ்மார்ட்போன்களின் அடுத்தக்கட்ட தயாரிப்பாக வெளியாகின்றன. இரு ஸ்மார்ட்போன்களும் 6000mAh மின்கலன் திறனுடன் வருவது உறுதியாகியுள்ளதால், ரியல்மி வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சிறப்புகள் என்னென்ன?
ரியல்மி நர்ஸோ 80 ப்ரோ, நர்ஸோ 80எக்ஸ் ஆகிய இரு ஸ்மார்ட்போன்களும் ஏப். 9ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
5ஜி பயன்பாட்டை உள்ளடக்கிய ரியல்மி நர்ஸோ 80 ப்ரோ இந்திய சந்தையில் ரூ. 20,000 -க்கு விற்பனையாகவுள்ளது. இதேபோன்று நர்ஸோ 80எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு ரூ. 13,000 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரியல்மி நர்ஸோ 80 ப்ரோ ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 6400 இயங்குதளத்துடனும், நர்ஸோ 80எக்ஸ் டைமன்சிட்டி 7400 இயங்குதளத்துடனும் அறிமுகமாகிறது.
இரு ஸ்மார்ட்போன்களும் 6000mAh மின்கலன் திறன் உடையவை. ரியல்மி நர்ஸோ 80 ப்ரோ 80 வாட்ஸ் திறனுடனும், நர்ஸோ 80எக்ஸ் 45 வாட்ஸ் திறனுடனும் வருகிறது. இரு ஸ்மார்ட்போன்களும் 4500 நிட்ஸ், ஒளி அளவு வெளிச்சம் கொண்டது.
இந்த இரு ஸ்மார்ட்போன்களுமே ஏப். 11ஆம் தேதி வெளியாகும் சீனாவின் ஐக்யூ நிறுவனத்தின் ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக சந்தையில் களமிறக்கப்படுகிறது.
இதையும் படிக்க | ஐபிஎல் ரசிகர்களுக்காக... ஒரு ரூபாய்க்கு 1 ஜிபி! பிஎஸ்என்எல் புதிய அறிவிப்பு!!