பிரதமர் இலங்கைக்கு செல்வதாலேயே கச்சத்தீவு தீர்மானம் நிறைவேற்றம்: ரகுபதி
தங்கம் விலை அதிரடி உயர்வு: ரூ. 68,000-ஐ கடந்தது!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ. 680 உயர்ந்துள்ளது.
வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.67,400 என்ற புதிய உச்சத்தை தொட்டது.
இந்த நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சவரனுக்கு ரூ. 680 அதிரடியாக உயர்ந்து ரூ. 68,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் விலை ரூ. 8,510.
வரலாற்றில் முதல்முறையாக தங்கத்தின் விலை ரூ. 68,000-ஐ கடந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதேபோல், வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ. 1 உயர்ந்து ரூ. 113-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ. 1,13,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க : அனைத்துவிதமான வசதிகளுடன் இலவச ஏசி ஓய்வறை... சென்னை மாநகராட்சி திட்டம்!
தங்கம் விலை கடந்து வந்த பாதை:
ஆண்டு விலை
(பவுன் - 8 கிராம்)
1950 -----------ரூ.79
1960 -----------ரூ.89
1970 -----------ரூ.147
1980 -----------ரூ.1,064
1990 -----------ரூ.2,560
2000 -----------ரூ.3,520
2010 -----------ரூ.14,800
2020 -----------ரூ.38,920
2025 (ஜன.22)----ரூ.60,200
2025 (பிப்.12)----ரூ.64,480
2025 (மாா்ச் 14)--ரூ.66,400
2025 (மாா்ச் 31)--ரூ.67,400