பாம்புக் கடியில் இருந்து மக்களை பாதுகாக்கும் கோயில் - 11 கிராம மக்களின் நம்பிக்கை என்ன?
உத்தரபிரதேசத்தின் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள ஜதௌடா பாண்டா என்ற கிராமத்தில் அமைந்துள்ள இந்த புனிதத் தலம், சுற்றியுள்ள 12 கிராம மக்களை பாம்பு கடியில் இருந்து பாதுகாப்பதாக கூறுகின்றனர்.
பல நூற்றாண்டுகளாக இந்த கிராம மக்களின் தனித்துவமான நம்பிக்கை, பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இந்த புனித தலம் பாபா நாராயணன் தாஸ் என்பவருக்கு அர்ப்பணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கோயில் நாடு முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்க்கிறது.

யார் இந்த பாபா நாராயணன்?
உள்ளூர் புராணங்களின்படி பாபா நாராயண தாஸ், ஒரு துறவி, தீவிர சிவபெருமான் பக்தர்.. தனது வாழ்க்கையை பல்வேறு இடங்களுக்கு சென்று தவம் செய்து இறுதியில் தனது கிராமத்திற்கு திரும்பினார். அங்கு அவர் உலகத்தை துறந்து சமாதி அடைந்து ஆழ்ந்த தியானத்தில் உயிர்நீத்தார். அவர் சமாதி அடைந்த இடம் அப்படியே உள்ளது.
அதன் பின்னர் இது ஒரு முக்கியமான யாத்திரை மையமாக மாறியது. நாடு முழுவதிலும் பக்தர்கள் பாபா நாராயண தாஸின் ஆசிர்வாதங்களை பெற இந்த கோயிலுக்கு வருகின்றனர்.
இவரின் அருளால் தான் இந்த சுற்றியுள்ள கிராமங்களில் யாரும் பாம்பு கடியால் இறக்கவில்லை என்று கிராம மக்கள் நம்புகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கோயிலில் ஒரு விசேஷ நாள் ஏற்பாடு செய்யப்படுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்