பிரதமர் இலங்கைக்கு செல்வதாலேயே கச்சத்தீவு தீர்மானம் நிறைவேற்றம்: ரகுபதி
வாழ்த்துங்களேன்!
பிறந்த நாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம்... இவை போன்று இன்னும் பல்வேறு இனிய வைபவங்களைக் காணும் வாசகர்களுக்குச் சக்தி விகடனின் வாழ்த்துகள்!
அன்பார்ந்த வாசகர்களே!
உங்கள் சக்தி விகடன் 21-ம் ஆண்டில் வெற்றிநடை போடும் இந்த இனிய தருணத்தில், உங்களுக்குப் பிடித்தமான வாழ்த்துங்களேன் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் பிரார்த்தனைகள், பிரசித்திபெற்ற பரிகாரத் தலங்களில் சமர்பிக்கப்படவுள்ளன.
பிறந்தநாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் முதலான இனிய தருணங்களை முன்னிட்டு, உங்களுக்காக அல்லது உங்களின் உற்றார்-உறவினர் மற்றும் நண்பர்களுக்கான பிரார்த்தனைகளை, உங்களின் மொபைல் போன் மூலம் பதிவு செய்யுங்கள். அதற்கு, இந்தப் பக்கத்தில் உள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்து, அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பூர்த்தி செய்தால் போதும்.
அவ்வாறு பதிவு செய்யப்படும் விவரப்படி, இனிய தருணங்களைக் கொண்டாடும் அன்பர்களுக்கான பிரார்த்தனைகள், அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் பொங்கிப் பெருகிடும் வகையில், தமிழகத்தின் வழிபாட்டுச் சிறப்பு மிக்க ஆலயங்களில் சமர்ப்பிக்கப்படும்.
15.4.25 முதல் 28.4.25 வரை பிரார்த்தனைக்குப் பதிவு செய்ய வேண்டிய கடைசித் தேதி: 8.4.25

திருப்பங்கள் தரும் திருமாந்துறை ஸ்ரீயோகநாயகி சமேத ஸ்ரீஅட்சயநாத சுவாமி திருக்கோயிலில்...
15.4.25 முதல் 28.4.25 வரையிலும் சுப நிகழ்வுகள், இனிய தருணங்களைக் கொண்டாடும் அன்பர்களுக்கான சிறப்புப் பிரார்த்தனைகள், தஞ்சை மாவட்டம் திருமாந்துறை அட்சயநாத சுவாமி ஆலயத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றன. புராணக் காலத்தில் மாமரங்கள் நிறைந்திருந்த காரணத்தால் `மாந்துறை' எனப் பெயர் பெற்றது. மூலவர் - ஆம்ரவனேஸ்வர் என்கிற அட்சயநாதர். அம்பிகை யோகாம்பிகை.
அம்மையும் அத்தனும் கிழக்கு நோக்கி அருள, இந்த இருவரின் சந்நிதிகளுக்கும் இடையில் பிள்ளையாரும் சந்நிதிகொண்டிருக்கும் அபூர்வ தலம் இது. ஆகவே, 'காணாதிபத்ய க்ஷேத்ரம்' எனப் போற்றப் படுகிறது. விநாயகர், சாபவிமோசனத்திற்காக சிவபூஜை செய்த தலம். சகல பரிகார - நிவாரணத் தலமாக விளங்குகிறது. அற்புதமான இந்தக் கோயிலிலேயே, வாசகர்கள் சகல சௌபாக்கியங்களைப் பெற்று வாழவும், அவர்களின் வேண்டுதல்கள் யாவும் நிறைவேறவும் வேண்டி வாழ்த்துப் பிரார்த்தனைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன!