சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு! ஐடி, வங்கித் துறை வீழ்ச்சி!
2025 - 26 நிதியாண்டின் முதல் நாளான இன்று (ஏப். 1) பங்குச் சந்தை வணிகம் சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ் 1,391 புள்ளிகளும் நிஃப்டி 23,200 புள்ளிகளுக்கு கீழும் சரிந்தது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்பின் எதிரொலி காரணமாக முதலீட்டாளர்களிடையே நிலவிய நிலையற்ற தன்மையால், இந்திய பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்ததாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.