செய்திகள் :

ஆர்டிஃபெக்ஸ் நிறுவனத்தின் 80% பங்குகளை கையகப்படுத்தும் டாடா ஆட்டோகாம்ப்!

post image

புதுதில்லி: ஜாகுவார் லேண்ட் ரோவர் குழுமத்தின் அங்கமான ஆர்டிஃபெக்ஸ் இன்டீரியர் சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் 80% பங்குகளை வெளியிடப்படாத தொகைக்கு கையகப்படுத்த போவதாக டாடா ஆட்டோகாம்ப் இன்று தெரிவித்தது.

இந்த பரிவர்த்தனை மூலம் 296 மில்லியன் பவுண்டுகள் வருவாய் கொண்ட ஆர்டிஃபெக்ஸ், டாடா ஆட்டோகாம்ப் குழுமத்தில் இணையும் என்று நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த கையகப்படுத்தல் மூலம், டாடா ஆட்டோகாம்ப் இந்தியாவின் மிகப்பெரிய வாகன உதிரிபாக உற்பத்தியாளர்களில் ஒருவராக தனது நிலையை பலப்படுத்தும் வேளையில், ஐரோப்பாவின் வாகனத் துறையிலும் அதன் இருப்பை வலுப்படுத்தும்.

இந்த கையகப்படுத்தல் மூலம், எங்கள் உலகளாவிய தடத்தை விரிவுபடுத்தும் அதே வேளையில், வாகன உட்புற அமைப்புகளில் எங்கள் நிபுணத்துவத்தை மேலும் வலுப்படுத்த உதவும் என்றார் டாடா ஆட்டோகாம்ப் சிஸ்டம்ஸ் துணைத் தலைவர் அரவிந்த் கோயல்.

ஆர்டிஃபெக்ஸின் தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் மேம்பட்ட உற்பத்தி திறன் எங்கள் தொழில்நுட்ப தலைமையை மேம்படுத்தும் அதே வேளையில், பிரீமியம் வாகன பிரிவில் எங்கள் இருப்பை வலுப்படுத்தும் என்றார் டாடா ஆட்டோகாம்ப் சிஸ்டம்ஸ் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான மனோஜ்.

இதையும் படிக்க: நிகழாண்டில் 46 கிளைகளைத் திறந்த கரூர் வைஸ்யா வங்கி!

நிதியாண்டின் முதல் நாளில் கடும் சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை!

2025-26 நிதியாண்டின் முதல் வர்த்தக நாளான இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் தொடங்கியுள்ளது.அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்துள்ள வரி நாளை முதல் அமலுக்கு வருவதால் உலகளாவிய சந்தைகளில் நிச்... மேலும் பார்க்க

தங்கம் விலை அதிரடி உயர்வு: ரூ. 68,000-ஐ கடந்தது!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ. 680 உயர்ந்துள்ளது.வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.67,400 என்ற புதிய உச்சத்தை தொட்டது.இந்த ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் அதிவேக டேட்டாவை வழங்குகிறது ஜியோ! காரணம் என்ன?

மற்ற நிறுவனங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் அதிவேக இணைய சேவையை ஜியோ நிறுவனம் வழங்குகிறது. இதற்குக் காரணம், ஜியோ நிறுவனம் தனது அலைதிறனை மேம்படுத்தியதுதான் என வல்லுநர்கள் கூறுகின்றனர். அதாவது, 5ஜி இணைய ... மேலும் பார்க்க

ஐபிஎல் ரசிகர்களுக்காக... இன்றுடன் முடிகிறது ஜியோ வழங்கிய சலுகை!

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ரசிகர்களுக்காக ஜியோ நிறுவனம் வழங்கிய சலுகை இன்றுடன் (மார்ச் 31) நிறைவு பெறவுள்ளது. மேலும் பார்க்க

நிகழாண்டில் 46 கிளைகளைத் திறந்த கரூர் வைஸ்யா வங்கி!

சென்னை: தனியார் துறையைச் சேர்ந்த கரூர் வைஸ்யா வங்கி 2024-25 ஆம் நிதியாண்டில் இது வரை 46 கிளைகளை நிறுவியுள்ளதாக தெரிவித்துள்ளது.சமீபத்தில் கும்பகோணம், விசாகப்பட்டினம், கோயம்புத்தூர் மற்றும் சென்னை ஆலப்... மேலும் பார்க்க

ரூ.700 கோடியில் படைகள் போக்குவரத்து வாகனங்கள்: அசோக் லேலண்ட் ஒப்பந்தம்

இந்திய பாதுகாப்புப் படைகள் போக்குவரத்துக்கான வாகனங்களை வழங்க பாதுகாப்புத் துறையுடன் ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது குறித்து நிறுவனம் வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க