சென்னை – தூத்துக்குடி இடையே புதிய ரயில்கள்! கனிமொழி கோரிக்கை
சுந்தர்.சி, வடிவேலுவின் கேங்கர்ஸ் டிரைலர்!
கேங்கரஸ் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
மத கஜ ராஜா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் சுந்தர். சி இயக்கியுள்ள திரைப்படம் கேங்கர்ஸ்.
முழுநீள நகைச்சுவைத் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் நாயகனாக சுந்தர். சி, நாயகியாக கேத்ரீன் தெரசா முக்கிய கதாபாத்திரங்களில் வடிவேலு, வாணி போஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
அவ்னி சினிமேக்ஸ் பிரைவேட் லிமிடட் நிறுவனம் சார்பாக நடிகை குஷ்பு மற்றும் ஏ.சி. சண்முகம் தயாரித்துள்ள கேங்கர்ஸ் படத்துக்கு சி.சத்யா இசையமைத்துள்ளார்.
ஏப். 24 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில் படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர். இதில், சுந்தர். சி மற்றும் வடிவேலுவுக்கு இடையேயான நகைச்சுவைக் காட்சிகள் படத்தின் மீது ஆவலை ஏற்படுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.