தஞ்சாவூர்: `அப்பா ஆம்புலன்ஸில போறார், ப்ளீஸ் விடுங்கண்ணா’ - கெஞ்சிய சிறுவனிடம் ச...
ரூ.700 கோடியில் படைகள் போக்குவரத்து வாகனங்கள்: அசோக் லேலண்ட் ஒப்பந்தம்
இந்திய பாதுகாப்புப் படைகள் போக்குவரத்துக்கான வாகனங்களை வழங்க பாதுகாப்புத் துறையுடன் ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பாதுகாப்புப் படைகளுக்கான வீரா்கள் போக்குவரத்து மற்றும் சரக்குப் போக்குவரத்துத் தேவைகளை நிறைவு செய்வதற்கான வாகனங்களை வாங்கும் திட்டத்தின் கீழ், ரூ.700 கோடி மதிப்பிலான கொள்முதல் ஒப்பந்தங்களை நிறுவனம் பெற்றுள்ளது.
இந்த புதிய ஒப்பந்தங்கள் மூலம், இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினரின் போக்குவரத்துத் தேவைகளை நிறைவு செய்வதில் அசோக் லேலண்ட் நிறுவனம் தனது முன்னிலையைத் தக்கவைத்துள்ளது.
ஸ்டாலியன் 4ல4, ஸ்டாலியன் 6ல6 (படம்), உயரம் குறைந்த சேஸீ கொண்ட பேருந்துகள் உள்ளிட்டவற்றை நிறுவனத்திடம் இருந்து வாங்குவதற்காக இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.