விஜய் விமர்சனத்தை பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை: செல்லூர் ராஜூ
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.85.49-ஆக முடிவு!
மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 25 காசுகள் உயர்ந்து ரூ.85.49 ஆக முடிவடைந்தது.
நடப்பு நிதியாண்டில் இந்திய ரூபாயின் மதிப்பு 2 சதவிகிதத்திற்கும் மேலாக சரிந்துள்ளது. ஏப்ரல் 2, 2024-ல் டாலருக்கு நிகராக இந்திய ரூ.83.42 ஆக இருந்தது.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.64 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், இது பிறகு அதிகபட்சமாக ரூ.85.40 ஆகவும், பிறகு குறைந்தபட்சமாக ரூ.85.70 ஐ தொட்ட நிலையில், முடிவில் 25 காசுகள் உயர்ந்து ரூ.85.49-ஆக முடிந்தது.
நேற்றைய வர்த்தகத்தில் அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ.85.74-ஆக இருந்தது.
இதையும் படிக்க: வரி விதிப்பு அச்சம் எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி சரிந்து முடிவு!