சத்தீஸ்கரில் பெண் நக்சல் சுட்டுக்கொலை
சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடனான மோதலில் பெண் நக்சல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தர் பகுதியில் அமைந்துள்ள தண்டேவாடா மற்றும் பிஜாப்பூர் மாவட்டங்களின் எல்லையில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தனர்.
அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் பெண் நக்சல் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சபரிமலை கோயிலில் நாளை நடை திறப்பு: 18 நாள்கள் திறந்திருக்கும்!
இதுவரை, என்கவுன்டர் நடந்த இடத்தில் இருந்து பெண் நக்சலின் சடலமும், துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. முன்னதாக சுக்மாவில் அண்மையில் நடந்த என்கவுன்டரில் 16 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மேலும் 2 வீரர்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.