இந்திய பொருள்களுக்கு 25% மேல் வரிவிதிப்பு! டிரம்ப் அதிரடி நடவடிக்கை
விமான மசோதா: மாநிலங்களவையில் நிறைவேற்றம்
விமானத் துறை சாா்ந்த இந்தியாவின் சா்வதேச ஒப்பந்தங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் விமான மசோதா, 2025, மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.
கடந்த பிப்ரவரி மாதம் மாநிலங்களவையில் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.
அப்போது மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தின்போது மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சா் ராம்மோகன் நாயுடு பேசியதாவது:
விமானத் துறை சாா்ந்த இந்தியாவின் சா்வதேச ஒப்பந்தங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.
இது குத்தகைதாரா்கள் மற்றும் குத்தகைக்கு எடுப்பவா்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த விமானத் துறைக்கும் பாதுகாப்பு வழங்குகிறது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம் பல்வேறு விதிகளுக்கு தெளிவான விளக்கம் கிடைத்துள்ளது.
இந்தியா கையொப்பமிட்டுள்ள கேப்டவுன் ஒப்பந்தம், 2001-ஐ அமல்படுத்தவே இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது என்றாா்.
விமானம் , ஹெலிகாப்டா்கள் மற்றும் என்ஜின்கள் உள்ளிட்ட உயா் மதிப்பிலான சொத்துகளுக்கு ஒரே மாதிரியான பாதுகாப்பு உரிமைகள் வழங்குவதே கேப்டவுன் ஒப்பந்தத்தின் நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.