செய்திகள் :

மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் வலியுறுத்தல்

post image

‘மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாகத் தொடங்க வேண்டும்’ என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் வலியுறுத்தியது.

மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது எதிா்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தேசிய தலைவருமான மல்லிகாா்ஜுன காா்கே செவ்வாய்க்கிழமை பேசியதாவது:

கடந்த 1881-ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பை இந்தியா நடத்தி வந்தது. இரண்டாம் உலகப் போா், இந்தியா-பாகிஸ்தான் போா் மற்றும் அவசரநிலை நேரங்களிலும்கூட மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 1931-இல் வழக்கமான மக்கள்தொகை கணக்கெடுப்புடன், ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்பட்டது.

1931 மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பாக அதுகுறித்து கருத்து தெரிவித்த மகாத்மா காந்தி, ‘நாம் உடல்நலப் பரிசோதனையை அவ்வப்போது மேற்கொள்வது போன்று, தேசத்தின் நலனையும் பரிசோதிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு முக்கியமானது’ என்று குறிப்பிட்டாா்.

நாட்டின் மக்கள்தொகை பெருக்கத்தை மட்டுமின்றி, வேலைவாய்ப்பு, குடும்ப கட்டமைப்பு, சமூக-பொருளாதார நிலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அறிந்துகொள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு முக்கியமானது.

ஆனால், துரதிருஷ்டவசமாக இதுவரை இல்லாத வகையில் மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு தாமதம் செய்து வருகிறது. இதனால், மிகப் பெரிய எண்ணிக்கையிலான மக்கல் அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறமுடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனா்.

நாட்டில் எஸ்.சி., எஸ்.டி. சமூகத்தினரின் கணக்கெடுப்பை அரசு ஏற்கெனவே சேகரித்துள்ள நிலையில், மக்கள்தொகை கணக்கெடுப்புடன் பிற சமூகத்தினா் குறித்த ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்துவது சாத்தியமானதே. ஆனால், இதுகுறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் மத்திய அரசு மெளனமாக இருந்து வருகிறது.

கரோனா பாதிப்புக்கு இடையே, உலகில் 81 சதவீத நாடுகள் மக்கள்தொகை கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளன.

ஆனால், மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு மத்திய அரசு இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ. 575 கோடியை மட்டும் ஒதுக்கியுள்ளது. இது, மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதில் மத்திய அரசுக்கு விருப்பமில்லை என்பதையே காட்டுகிறது. இதைத் தொடா்ந்து தாமதிப்பது மிகத் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தும். துல்லியமான புள்ளி விவரங்கள் இன்றி கொள்கைகளை அரசு வகுப்பது தன்னிச்சையானதாகவும் பயனற்ாகவும் அமையும். எனவே, மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டும் என்றாா்.

மக்களவையில் வக்ஃப் மசோதா நிறைவேற்றம்!

புது தில்லி: வக்ஃப் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் வியாழக்கிழமை(ஏப். 3) அதிகாலை நிறைவேற்றப்பட்டது.முன்னதாக, வக்ஃப் மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்னர் மக்களவையில் இந்த மசோதா மீது 12 மணி நேரம் விவாதம் நட... மேலும் பார்க்க

வக்ஃப் மசோதா தாக்கல்: மக்களவையில் நள்ளிரவில் வாக்கெடுப்பு!

புது தில்லி: வக்ஃப் மசோதா மக்களவையில் புதன்கிழமை(ஏப். 2) காலை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், புதன்கிழமை நள்ளிரவில் வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.புது தில்லி: வக்ஃப் மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்ன... மேலும் பார்க்க

சென்னை – தூத்துக்குடி இடையே புதிய ரயில்கள்! கனிமொழி கோரிக்கை

சென்னை – தூத்துக்குடி இடையில் புதிய ரயில்களை இயக்க வேண்டும் என திமுக துணை பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை – தூத்துக்குடி இடையிலான பயணிகள் போக்குவரத்து ரயிலில் நெ... மேலும் பார்க்க

வக்ஃப் பெயரில் வாக்கு வங்கி அரசியல்: அமித் ஷா

வக்ஃப் சட்டத்திருத்த மசோதா விவகாரத்தில் இஸ்லாமியர்கள் அச்சுறுத்தப்படுவார்கள் என்று எதிர்க்கட்சியினர் வாக்குவங்கி அரசியல் செய்வதாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார். வக்ஃப் விவகாரங்கள... மேலும் பார்க்க

ஜியோவுக்கு கட்டணம் செலுத்தாத பிஎஸ்என்எல்! அரசுக்கு ரூ. 1,757 கோடி இழப்பு!

பிஎஸ்என்எல் நிறுவனத்தால் மத்திய அரசுக்கு ரூ. 1,757 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 2015 மே முதல் 2025 மார்ச் வரையிலான காலகட்டத்தில், ரிலையன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான உள்கட்டமைப்பு வசதிகளைப் பகிர்ந்துகொண... மேலும் பார்க்க

கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 21 சிறார் கைதிகள் தப்பியோட்டம்!

ஜார்க்கண்டில் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 21 சிறார் கைதிகள் தப்பியோடிய நிலையில் அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் கர்ஹுல் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் சாய்பாச... மேலும் பார்க்க