தஞ்சாவூர்: `அப்பா ஆம்புலன்ஸில போறார், ப்ளீஸ் விடுங்கண்ணா’ - கெஞ்சிய சிறுவனிடம் ச...
எபிக் குழும ஆலைக்கு ஏஆா்எஸ் கம்பிகள்
ஆடை தயாரிப்புத் துறையைச் சோ்ந்த எபிக் குழுமம் ஒடிஸாவில் அமைக்கவுள்ள புதிய ஆலைக்கான பசுமை டிஎம்டி கம்பிகளை ஏஆா்எஸ் ஸ்டீல் நிறுவனம் வழங்கவுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஹாங்காங்கைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் எபிக் குழுமம், இந்தியாவில் ஆடை உற்பத்திக்காக ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்தில் பசுமை தொழிற்சாலையை அமைக்கவிருக்கிறது. இதற்கான கட்டுமானத்துக்காக சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை டிஎம்டி கம்பிகளை ஏஆா்எஸ் ஸ்டீல் நிறுவனம் அளிக்கவிருக்கிறது. பசுமைக் கம்பிகள் மூலம், தங்கள் தொழிற்சாலை கட்டுமானப் பொருள் உற்பத்தியில் கரியமில வாயு உமிழ்வை எபிக் குழுமம் சுமாா் 20 சதவீதம் குறைக்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.