தனி படுக்கை, தனி உறக்கம்; தம்பதிகளிடையே பிரபலமாகும் Sleep Divorce - என்ன காரணம்?
தம்பதிகள் பொதுவாக ஒரே படுக்கையில் உறங்குவதை விரும்புவார்கள். ஆனால் தற்போது இருக்கும் தம்பதிகள் தூக்க விவாகரத்தை நாடுகிறார்கள்.
அதாவது தனித்தனி படுக்கை அல்லது தனித்தனி தூக்கத்தை தம்பதிகள் விரும்புகிறார்கள். இதனால் தூக்க கோளாறுகள் குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

தம்பதிகள் தூக்க விவாகரத்து மேற்கொள்ள பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் பொதுவான காரணமாக குறட்டையை தான் கூறுகின்றனர்.
ஒரு நபர் நிம்மதியான உறக்கத்தை பெறுவதற்காகவே இவ்வாறு தனித்தனி உறக்கம் மேற்கொள்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.
அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஸ்லீப் மெடிசின் 2024 கணக்கெடுப்பின்படி, 15% தம்பதிகள் தொடர்ந்து இவ்வாறு தூக்க விவாகரத்தை மேற்கொள்கின்றனர், 20% தம்பதிகள் எப்போதாவது அவ்வாறு செய்கின்றனர்.
ஸ்லீப் பவுண்டேஷன் ஆர்கனைசேஷன் படி, தூக்க விவகாரத்தை முயற்சிப்பவர்கள் சுமார் 53 சதவீதம் பேர் நன்றாக உறங்குகிறார்கள்.

தனித்தனியாக படுக்கைகளை வைத்திருக்கும் தம்பதிகள் ஒன்றாக உறங்குவதை விட, ஒரு இரவில் சராசரியாக 37 நிமிடங்களுக்கு மேல் உறங்குகிறார்கள் என கூறப்பட்டுள்ளது.
ஆனால் இவ்வாறு தம்பதிகள் தனித்தனி படுக்கையில் உறங்குவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து மருத்துவர்கள் எச்சரிப்பது என்ன?
இவ்வாறு தம்பதிகள் விலகி உறங்குவதால் நீண்ட நேரம் தூக்கம் கிடைக்கும். ஆனால் அவர்கள் இடையேயான நெருக்கத்தை ”தூக்க விவாகரத்து” குறைக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.