செய்திகள் :

Relationship: உறவுகளை மேம்படுத்துமா சின்னச்சின்ன தொடுதல்கள்?

post image

காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால் சின்ன தகரம் கூட தங்கம் தானே' - தொடுதலின் மகத்துவத்தை மிக அழகாகச் சொல்லும் பாடல் வரிகள்.

உண்மையில் அன்பானவர்களின் கண்ணியமான சின்ன தொடுதலுக்கு எதையும் மாற்றக்கூடிய சக்தி உள்ளது. இது காதலில் மட்டும் இல்லை. பெற்றோர்கள், குழந்தைகள், சகோதரர்கள், நண்பர்கள் என யார் மீதும் நமக்குள்ள அதீத அன்பை வெளிப்படுத்த வார்த்தைகளைவிட சின்னச் சின்ன தொடுதல்களும் அரவணைப்புகளுமே அதிகம் உதவுகின்றன.

'கட்டிப்பிடி வைத்தியமும்' இந்தத் தொடுதல் ட்ரிக்தான். தொடுதல் எந்த வகையிலெல்லாம் உறவுகளை மேம்படுத்தும் என்பது பற்றி உளவியல் ஆலோசகர் வசந்தி பாபுவிடம் கேட்டோம்.

Parenting
Parenting (Representative Image)

அன்பான தொடுதல்களும் அரவணைப்பும் தரும், நம்பிக்கையையும் ஆறுதலையும் வேறு எதுவும் தந்துவிட முடியாது. குறிப்பாக, குழந்தைகளிடம் பெற்றவர்கள் தொட்டுக் காட்டும் அரவணைப்பு இன்றியமையாதது.

ஒரு குழந்தை பிறந்தவுடனேயே தாயிடமிருந்து அதற்கு இந்தத் தொடுதலும் அரவணைப்பும் கிடைக்க வேண்டும். பாலூட்டுவது, மார்புடன் அணைத்துக்கொள்வது போன்றவையெல்லாம் பிறந்த குழந்தைகளை அரவணைக்கும் சிறந்த வழிகள். அவர்கள் வளரும்போதும் பதின்பருவத்தில் இருக்கும்போதும் இந்த அரவணைப்பு முக்கியம்.

இதுபோல் சின்னச் சின்ன அன்புக்காகத்தான் அவர்கள் ஏங்கிக் கொண்டிருப்பார்கள். அது பெற்றோர்களிடமிருந்தே கிடைக்கும்போது அவர்கள் வழி தவறிச் செல்வதற்கான வாய்ப்புகள் குறைவு.

எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் வெற்றி பெறும் நேரங்களில் தட்டிக் கொடுத்தும் தோல்வியடையும் நேரங்களில் அரவணைத்தும் பழகி வந்தால் பெற்றோர்-பிள்ளைகளுக்கு இடையே அன்பு, பாசம் என்பதைத் தாண்டி ஒரு சிறந்த நட்பும் கட்டமைக்கப்படும்.

couples
couples

அன்பின் மொழிதான் தொடுதல். கணவன்-மனைவி என்று வரும்போது அவர்களின் தாம்பத்ய உறவைத் தவிர்த்து அவ்வப்போது ஏற்படும் சின்னச் சின்ன தொடுதல்களும் தோள் சாய்தலும் கைகோத்தலும், கால் வருடல்களும் அவர்களின் காதலை அதிகப்படுத்தும். இருவரின் புரிந்துணர்வையும் மேம்படுத்தும்.

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கணவர் சோர்ந்திருக்கும்போது மனைவியின் ஒரு சின்ன, அழுத்தமான கைப்பற்றுதல் தரும் ஆறுதலை வேறு எந்தப் பொருளாலும் தந்துவிட முடியாது. அதுபோல் மனைவிக்கு கணவனின் நெஞ்சோடு சேர்த்த அணைப்புக்கும் வருடல்களுக்கும் இணையாக இந்த உலகத்தையே கொடுத்தாலும் ஈடாகாது. எனவே, கணவன்-மனைவி உறவை வலுப்படுத்த அவ்வப்போது நிகழும் சின்னச் சின்ன தொடுதல்கள் அவசியமான ஒன்று என்பதை தம்பதியர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Relationship
Lovers I Romance

காதலில் தொடுதல் என்பது அந்தக் காதலை வலுவாக்கும் காரணிகளில் ஒன்று. காதலின் தொடக்கத்தில் இருவருக்குமே கைகள் கோப்பது, தோளில் சாய்வது போன்ற தொடுதல்களுக்கு தயக்கம் இருக்கத்தான் செய்யும். ஆனால், அதையும் தாண்டி எதார்த்தமாக விரல்படும்போதோ, நடந்து செல்லும்போது தோள்கள் உரசும்போதோ உடலில் பல ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் பாயும், வயிற்றில் பட்டாம்பூச்சிகள் அடித்துக் கொள்ளும். அப்போதெல்லாம் காதலர்கள் சிறகுகள் இல்லாமலே வானத்தில் பறப்பார்கள்! காதலில் நடக்கும் கண்ணியமான தொடுதல்கள் காதலர்கள் இருவருக்குமிடையே ஒருநம்பிக்கையையும் பாதுகாப்பு உணர்வையும் தங்கள் காதலைத் திருமணம் நோக்கி நகர்த்திச் செல்ல ஒரு தூண்டுதலையும் தரும்.

நெருங்கிய நண்பர்களிடம் பெரும்பாலும் இந்தத் தொடுதல் கலாசாரத்தை அதிகமாகப் பார்க்கலாம். இதில் ஆண், பெண் பாலின பேதம் இருக்காது. எந்த வன்மமும் இருக்காது. நீ என்னுடைய தோழன், தோழி என்ற உரிமை கொண்டாடுதலே அதிகம் இருக்கும். தோள்மீது கை போட்டுக்கொண்டு போட்டோ எடுத்துக்கொள்ளவது, கைகோத்துக்கொண்டு ஒன்றாகச் சுற்றுவதெல்லாம் இந்த மனநிலைதான். இது மனதுக்கு ஒருவிதப் பாதுகாப்பையும் சந்தோஷத்தையும் தரும். இதனால்தான் எவ்வளவு பெரிய பிரச்னையாக இருந்தாலும் நண்பர்களிடம் எளிதாகப் பகிர்ந்துகொள்ள முடிகிறது.

Relationship
மனநல ஆலோசகர் வசந்தி பாபு

மனம் உடைந்து இனி வாழவே முடியாது என்று கண்ணீர்விட்டுக் கொண்டிருப்பவர்களிடம் எவ்வளவு அறிவுரை சொன்னாலும் வேலைக்காகாது; கேட்க மாட்டார்கள். அதே நேரத்தில் எதுவும் செல்லாமல் நாம் தரும் நம்பிக்கையான அணைப்போ, தலை வருடலோ அவர்களின் கண்ணீரை நிறுத்திவிடும். இதுதான் வார்த்தைகளுக்கும் உணர்வுகளுக்கும் உள்ள வித்தியாசம்'' என்கிறார் வசந்தி பாபு.

தனி படுக்கை, தனி உறக்கம்; தம்பதிகளிடையே பிரபலமாகும் Sleep Divorce - என்ன காரணம்?

தம்பதிகள் பொதுவாக ஒரே படுக்கையில் உறங்குவதை விரும்புவார்கள். ஆனால் தற்போது இருக்கும் தம்பதிகள் தூக்க விவாகரத்தை நாடுகிறார்கள். அதாவது தனித்தனி படுக்கை அல்லது தனித்தனி தூக்கத்தை தம்பதிகள் விரும்புகிறார... மேலும் பார்க்க

Relationship: காதல், திருமண வாழ்வை பாதிக்கும் Insecure உணர்வு. தீர்வுகள் இதோ!

'நீ ஏன் ஆரம்பத்துல இருந்த மாதிரி இப்போ இல்ல?', 'உனக்கு என்னைவிட முக்கியமான விஷயம் நிறைய இருக்குதுல்ல?', 'இப்போவெல்லாம் நான் உனக்கு அலட்சியமா போயிட்டேன்ல?' - இந்த மாதிரியான கேள்விகளை எதிர்கொள்ளாத காதல்... மேலும் பார்க்க

Men Psychology: ஆண்கள் ஏன் வீட்டு வேலை செய்வதில்லை? உளவியல் ஆலோசகர் சொல்லும் காரணம் இதான்!

நாள் முழுக்க வேலை செய்தாலும், ‘வீட்ல சும்மா தானே இருக்க’ என்கிறஒற்றைவரியில் குடும்பத்தலைவிகளின் உழைப்பு மட்டம் தட்டப்படும். வேலைபார்க்கும் பெண்களுக்குச் சில கணவர்கள் வீட்டு வேலைகள் செய்கிறார்கள் என்றா... மேலும் பார்க்க

Honeymoon: திருமணமான புதிதில் செல்லும் சுற்றுலாவை ஏன் 'தேன்நிலவு' என அழைக்கிறோம் தெரியுமா?

நவீன வாழ்க்கை முறையில் திருமணத்தில் அல்லது திருமணம் சார்ந்த விஷயங்களில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ப்ரீ வெட்டிங் போட்டோ சூட் முதல் வெளி இடங்களுக்கு ஹனிமூன் செல்வது வரை திருமணம் சார்ந்த விஷயங்களில்... மேலும் பார்க்க

`ஆண்கள் என்றாலே பாவம்தானா...?" - உண்மை சொல்லும் மனநல மருத்துவர்

`நான் மகான் அல்ல' படத்தில் நடிகர் கார்த்தி 'இப்போலாம் குடும்பஸ்தனைப் பார்த்தா மரியாதை வருதுடா...' என்பார். நடுத்தரக் குடும்பத்தில், அப்பாவின் சிரமத்தை, உறவினர்களின் உதாசினத்தைப் பார்த்து வளர்ந்த 90's ... மேலும் பார்க்க