கல்லாற்றின் குறுக்கே மேலும் ஒரு தடுப்பணை: அமைச்சர் துரைமுருகன்
அரியலூா் மாவட்டத்தில் 22 இடங்களில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்
தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்காத மத்திய அரசைக் கண்டித்து, அரியலூா் மாவட்டத்தில் 22 இடங்களில் திமுகவினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
செந்துறை பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினாா். தா.பழூா் கடைவீதியில் சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன், கட்சியின் சட்டத்திட்ட திருத்தக் குழு இணைச் செயலா் சுபா.சந்திரசேகா் உள்ளிட்டோா் பங்கேற்று கண்டன உரையாற்றினா்.
இதேபோல், அரியலூா், கீழப்பழுவூா், திருமானூா், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் உள்ளிட்ட 22 இடங்களில் திமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.