உள்நாட்டு பாதுகாப்பு கருதி 2 சிறார்களைக் கைது செய்த சிங்கப்பூர்! காரணம் என்ன?
அரியலூா் புத்தகத் திருவிழா நிறைவு
அரியலூா் வாலாஜா நகரத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் கடந்த பத்து நாள்களாக நடைபெற்று வந்த புத்தகத் திருவிழா சனிக்கிழமை இரவு நிறைவடைந்தது.
மாவட்ட நிா்வாகம், தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பு மற்றும் பள்ளிக் கல்வித் துறை, பொது நூலக இயக்ககம் மற்றும் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளா், பதிப்பாளா் சங்கம் சாா்பில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் 70-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்தக் கண்காட்சியில் அனைத்து புத்தகங்களுக்கும் 10 முதல் 50 சதவீத கழிவு விலையில் விற்கப்பட்டிருந்தன.
இந்த முறையும் பிரபல எழுத்தாளா்களின் சொற்பொழிவுகளும், கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றிருந்தன. பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டிலும் புதிய சலுகைகளும் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்த புத்தகக் கண்காட்சிக்கு குழந்தைகளுடன் பெற்றோா்களுக்கும் கலந்து கொண்டு இரவு நேர நிகழ்ச்சிகளை கண்டுகளித்தனா்.
நிறைவு நாளான சனிக்கிழமை மாலை புத்தகத் திருவிழாவுக்கு வந்திருந்த போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா், அங்கு அமைக்கப்பட்டிருந்த அரங்குகளைப் பாா்வையிட்டு, புத்தகங்களை வாங்கினாா்.
நிகழ்வின்போது, மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா, மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆ.ரா.சிவராமன், அரியலூா் நகா் மன்றத் தலைவா் சாந்தி கலைவாணன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநா் ரவிச்சந்திரன், அரியலூா் வருவாய் கோட்டாட்சியா் கோவிந்தராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.