Career: பள்ளி படிப்பும், 'இந்தத்' திறனும் இருந்தால் போதும்; மத்திய அரசின் 'ஜூனியர் அசிஸ்டன்ட்' பணி!
மத்திய சாலை ஆய்வு நிறுவனத்தில் (Central Road Research Institute) வேலைவாய்ப்பு அறிவிப்பு.
என்ன பணி?
ஜூனியர் செயலாளர் அசிஸ்டன்ட் (Junior Secretariat Assistant), ஜூனியர் ஸ்டெனோகிராபர்.
மொத்த காலிபணியிடங்கள்: 209
வயது வரம்பு: ஜூனியர் செயலாளர் அசிஸ்டன்ட் பணிக்கு அதிகபட்சமாக 28;
ஜூனியர் ஸ்டெனோகிராபர் பணிக்கு அதிகபட்சமாக 27. (சில பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வுகள் உண்டு)
சம்பளம்: ஜூனியர் செயலாளர் அசிஸ்டன்ட் பணிக்கு ரூ.19,900 - 63,200; ஜூனியர் ஸ்டெனோகிராபர் பணிக்கு ரூ.25,500 - 81,100.

கல்வி தகுதி: பள்ளிப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கணினி திறன் இருக்க வேண்டும்.
எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
எழுத்து தேர்வு, கணினி திறன் தேர்வு.
எழுத்து தேர்வு மே அல்லது ஜூன் மாதம் இருக்கலாம். கணினி திறன் தேர்வு ஜூன் மாதத்தில் இருக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 21, 2025.
விண்ணப்பிக்கும் இணையதளம்:online.cbexams.com
மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
