மனோஜ் பாரதிராஜா: "கனிவான ஆன்மா... உடைந்து போனேன்" - சிலம்பரசன் இரங்கல்!
மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்
கீழ்வேளூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கீழ்வேளூா் தெற்கு ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, தெற்கு ஒன்றியச் செயலாளா் முத்தையன் தலைமை வகித்தாா்.
கிராம ஊராட்சிகளில் அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ள உடனடியாக நிதி வழங்க வேண்டும்; பிரதமா் மற்றும் கலைஞா் வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகள் வீடு கட்டி முடித்து பல மாதங்கள் ஆன நிலையில் அவா்களுக்கு கடைசி தவணைத் தொகையை வழங்க வேண்டும்; 100 நாள் வேலை திட்ட சம்பள பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மாவட்ட செயற்குழு உறுப்பினா் சுபாஷ் சந்திரபோஸ், மாவட்ட குழு உறுப்பினா் அம்பிகாபதி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சிவக்குமாா், கிருஷ்ணமூா்த்தி, அகிலா உள்ளிட்ட பலா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.