veera dheera sooran: 'மதுர வீரன் தானே!' - 'வீர தீர சூரன் பாகம் 2' BTS Clicks | P...
டிக்கெட் வைத்திருக்கும் அதிர்ஷ்டசாலிக்கு ரூ.50,000 பரிசு வழங்கும் மத்திய ரயில்வே - ஏன் தெரியுமா?
மத்திய ரயில்வே (CR) லக்கி யாத்ரி யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது தினசரி உள்ளூர் ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது மத்திய ரயில்வே.
இந்த திட்டத்தின் மூலம் தினமும் டிக்கெட் எடுத்து ரயிலில் பயணிக்கும் ஓர் அதிர்ஷ்டசாலி பயணிக்கு பத்தாயிரம் ரூபாய் ரொக்க பரிசும், வாரம் பம்பர் பரிசாக ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இந்த திட்டம் அடுத்த வாரம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எட்டு வாரங்களுக்கு நீடிக்கும் இந்த திட்டம் டிக்கெட் அல்லது சீசன் பாசுடன் பயணிகள் பயணிக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதனால் எந்த ஒரு டிக்கெட் கட்டணமும் உயர்த்தப்படவில்லை. FCB இன்டர்ஃபேஸ் கம்யூனிகேஷன் பிரைவேட் லிமிடெட் இந்த திட்டத்திற்கு பங்களித்துள்ளது.
மத்திய ரயில்வேயில் சராசரியாக ஒரு நாளைக்கு 40 லட்சம் பேர் பயணிக்கின்றனர். டிக்கெட் இல்லாமல் பயணிப்பவர்களின் பங்கு 20% என தோராயமான மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
இதில் டிக்கெட் பரிசோதனை செய்பவர்களால் தினமும் 4000 முதல் 5000 பேர் வரை டிக்கெட் இல்லாமல் பயணித்ததற்காக பிடிப்படுகின்றனர்.
இதனை தடுக்கும் வகையிலும், பயணிகள் டிக்கெட் வாங்குவதை ஊக்குவிக்கும் வகையிலும், டிக்கெட் எடுத்து பயணிப்பவர்களுக்கு வெகுமதி அளிக்கும் வகையிலும் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
ரயில் நிலையங்களில் திடீரென டிக்கெட் அல்லது சீசன் பாசை காண்பிக்கும்படி கேட்பார்கள், சரி பார்த்த பிறகு ரொக்க பரிசு உடனடியாக வழங்கப்படும் என மத்திய ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி கூறியிருக்கிறார்.