செய்திகள் :

`அவர் ஆசையைச் சொல்கிறார்; ஆனால் உண்மையில்...' - விஜய் பேச்சு குறித்து டி.டி.வி.தினகரன்

post image

திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள மதுரை வந்த டி.டி.வி தினகரன் செய்தியாளர்களிடம், "நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஏற்கெனவே இருக்கிறோம். எடப்பாடி பழனிசாமிதான் டெல்லிக்கு சென்று அமித் ஷாவை சந்தித்து அதை வெளிப்படையாக சொல்லாமல் பேசி வருகிறார்.

விஜய்

அதிமுக-வைச் சேர்ந்தவர்கள்தான் மத்திய அமைச்சர்களை சந்தித்து வருகிறார்கள். என்ன பேச்சுவார்த்தை என்பதை பலமுறை நான் கூறியிருக்கிறேன். திமுக என்கிற தீய சக்தி ஆட்சியில் நீடிக்கக் கூடாது, திமுக-வுக்கு எதிராக மாற்று சக்தியாக தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளது. திமுக-வின் மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர நினைக்கும் கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரலாம்.

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தவெக-வுக்கும் திமுக-வுக்கும்தான் போட்டி என்று விஜய் அவருடைய ஆசையை சொல்லி இருக்கிறார். உண்மையான மாற்றாக மக்கள் மனதில் இருப்பது தேசிய ஜனநாயக கூட்டணிதான்.

சுயநலத்தால், பதவி வெறியால் திமுக மீது உள்ள பயத்தால், தங்கள் மீது வழக்கு வந்து விடக் கூடாது என்பதற்காக திமுக வெற்றி பெறுவதற்காக மறைமுகமாக உதவி வருபவர்கள் யாரென்று தெரியும். அதனால் அங்குள்ள தொண்டர்களும், ஜெயலலிதாவின் தொண்டர்களும் எங்கிருந்தாலும் ஓரணியில் திரண்டு திமுக-வை வீழ்த்துவதற்கு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

ஓபிஎஸ், கட்சிக்கு துரோகம் செய்தார், அதனால் அவரை சேர்க்க மாட்டோம் எனக் கூறுகிற எடப்பாடி பழனிசாமிதான், துரோகத்தின் முழு வடிவமாக இருக்கிறார். அவர் பேச்சுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

நிதி ஒதுக்கீட்டில் பாஜக அரசு பாரபட்சமாக செயல்படவில்லை. அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரிதான் செயல்படுகிறது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தை விட பாஜக ஆட்சிக்காலத்தில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது, அரசு மக்களிடம் நம்பிக்கை இழந்துள்ளது. அதனை மறைப்பதற்காக மத்திய அரசின் மீது பழி போடுகிறார்கள். கருத்துக்கணிப்புகள் என்பதெல்லாம் பொய், மக்கள் கணிப்புதான் எப்போதும் வெற்றி பெறும்" என்றார்.

`ஓய்வு குறித்து விவாதிக்க ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் சென்றாரா பிரதமர் மோடி?’ - பரவும் தகவலின் பின்னணி

பிரதமராக நரேந்திர மோடி 2014-ம் ஆண்டு பதவியேற்ற பிறகு கடந்த 10 ஆண்டில் ஒரு முறை கூட ஆர்.எஸ்.எஸ்.தலைமை அலுவலகத்துக்கு சென்றது கிடையாது. தாய் இயக்கமான ஆர்.எஸ்.எஸ்.. பா.ஜ.கவின் வெற்றிக்காக தொடர்ந்து பாடுப... மேலும் பார்க்க

"ரூ.85,000 கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்திருக்கு..! " - கேள்வி எழுப்பும் அன்புமணி ராமதாஸ்

சீன கார் நிறுவனத்தின் ரூ.85,000 கோடி முதலீட்டை தமிழக அரசு இழந்துவிட்டதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இது குறித்து அன்புமணி ராமதாஸ், " சீனாவைச் சேர்ந்த மின்சார மகிழ... மேலும் பார்க்க

`நீட் ரகசியம் கேட்டால், உசேன் போல்டை விட வேகமாக ஓடுகிறார் உதயநிதி’ - ஆர்.பி.உதயகுமார் காட்டம்

மதுரை திருமங்கலம் ஒன்றியத்தில் நடந்த அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "தமிழக முழுவதும் 234 தொகுதிகளில் 68,500 வாக்குச்சாவடிகள் உள்ளது. இதில் பூத... மேலும் பார்க்க