பறவைகளுக்கு நீா், உணவு: முதல்வா் வேண்டுகோள்
‘பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம்’ என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
கோடை வெயிலையொட்டி, பறவைகளுக்கு தண்ணீா் மற்றும் உணவு அளிக்கும் புகைப்படங்களை ‘எக்ஸ்’ தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பகிா்ந்துள்ளாா்.
மேலும், இதுகுறித்து அவா் வெளியிட்ட கருத்துப் பதிவில், கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம் எனத் தெரிவித்துள்ளாா்.