செய்திகள் :

தூத்துக்குடி: கார் தொழிற்சாலையில் நேர்முகத்தேர்வு நடப்பதாக வதந்தி; ஏமாற்றத்துடன் திரும்பிய இளைஞர்கள்

post image

தூத்துக்குடி மாவட்டம், சில்லாநத்தம் சிப்காட் பகுதியில் 408 ஏக்கர் பரப்பளவில் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் என்ற நிறுவனம், மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்கிறது.

கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல்வர் ஸ்டாலின் இத்தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார்.

ஆண்டுக்கு 50 ஆயிரம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் 2 பணிமனைகள், 2 குடோன்கள், கார் பரிசோதனை செய்யும் இடம் உள்ளிட்டவற்றை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

நேர்முகத்தேர்வுக்கு திரண்டவரகள்

இந்த நிறுவனம் வரும் ஜூன் மாதத்தில் மின்சார கார் உற்பத்தியைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், வின் பாஸ்ட் நிறுவனத்தில் வேலைவாய்ப்புக்கு நேர்முகத் தேர்வு நடைபெறுவதாகச் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் கடந்த சில நாட்களாகத் தகவல் பரவியது.

இதனால் தூத்துக்குடி மாவட்டம் மட்டுமில்லாமல் நெல்லை, விருதுநகர், மதுரை, தென்காசி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 200-க்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்கள் வின்பாஸ்ட் நிறுவனம் அமைந்துள்ள பகுதியில் குவிந்தனர்.

ஆனால், அவர்கள் அங்கு வந்த பிறகுதான் கட்டுமானப் பணிகள் நடந்து வரும் அந்த நிறுவனத்தில் தற்போது வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யும் பணிகள் எதுவும் நடக்கவில்லை என்று தெரியவந்தது.

நேர்முகத்தேர்வுக்கு திரண்வர்களின் வாகனங்கள்

நிறுவன ஊழியர்கள் சமூக வலைத்தளங்களில் பரவிய தகவல் உண்மையல்ல என்பதை எடுத்துக் கூறினர். இதனால் சுயவிவரக்குறிப்பு மற்றும் சான்றிதழ்களுடன் வந்த இளைஞர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

ஒரே நேரத்தில் சிப்காட் பகுதியில் இளைஞர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.   

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

StartUp: தொழில் முனைவோர் வெற்றிக்கு வழிகாட்டும் JCOM; மதுரையில் ஒரு நாள் நிகழ்ச்சி.. என்ன ஸ்பெஷல்?

தொழில்துறையில் சாதித்தவர்கள், சாதிக்க உள்ளவர்களை ஒன்றிணைத்து தொழில் வளர்ச்சிக்கு பங்காற்றி வரும் JCOM (Jaycees chamber of commerce) தொழில்துறையினர், ஆலோசகர்கள், சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொள்ளும் ப... மேலும் பார்க்க

Top 10 உலக பணக்காரர்கள்-2025: மஸ்க் முதல் மார்க் வரை... யார் எந்த இடத்தில் உள்ளனர்?

உலக தொழில்திபர்களும் முதலீட்டாளர்களும் தொழில்முனைவோரும் கடந்த சில ஆண்டுகளில் தங்கள் செல்வத்தை மிகப் பெரிய அளவில் உயர்த்தியிருக்கின்றனர். புதிய உருவாக்கங்கள், யுத்திகள் மற்றும் தொலைநோக்கு பார்வை மூலம் ... மேலும் பார்க்க