செய்திகள் :

கச்சத்தீவு தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!

post image

கச்சத்தீவைத் திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டுவந்த தனித்தீர்மானம், சட்டப்பேரவையில் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்தியாவுக்குச் சொந்தமாக இருந்த கச்சத்தீவு, இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட நிலையில், அதனை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக பேரவையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனித்தீர்மானத்துக்கு எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக உள்ளிட்டவை ஆதரவு தெரிவித்ததால், குரல் வாக்கெடுப்பு மூலம் அவைத் தலைவர் அப்பாவு, வாக்கெடுப்பு நடத்தி, எதிர்ப்பு இல்லாததால் ஒருமனதாக நிறைவேற்றப்படுவதாக அறிவித்துள்ளார்.

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்களைப் போக்கிட கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வாக அமையும் எனவும், இந்தியா – இலங்கை இடையேயான ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து கச்சத்தீவை திரும்பப்பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தீர்மானம் கொண்டுவந்தார்.

இந்தியா - இலங்கை கடல் எல்லையில், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்கிறது. தமிழக மீனவர்களும் இந்திய மீனவர்கள்தான் என்பதை அடிக்கடி மத்திய அரசு மறந்துவிடுகிறது. எனவே, அவர்களும் இந்திய மீனவர்கள்தான் என்பதை அழுத்தமாக மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியதாக இருக்கிறது என்று தீர்மானத்தைக் கொண்டு வந்து முதல்வர் பேசினார்.

இந்த தீர்மானத்தின் மீது நடத்தப்பட்ட விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய அனைத்துக் கட்சி எம்எல்ஏக்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து ஆதரவு அளித்தனர். பாஜக, அதிமுக என எதிர்க்கட்சிகளின் எம்எல்ஏக்களும் இந்த தீர்மானத்துக்கு ஆதரவு அளித்ததால், தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக அவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார்.

கச்சத்தீவு தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்த எம்எல்ஏக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

சென்னையில் கார்ல் மார்க்ஸ் சிலை: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னையில் கார்ல் மார்க்ஸுக்கு உருவச் சிலை அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.மதுரையில் நடைபெற்று கொண்டிருக்கும் அகில இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாநாட்டில... மேலும் பார்க்க

வக்ஃப் மசோதாவுக்கு எதிராக வழக்கு: கருப்பு பட்டை அணிந்து முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறவில்லை என்றால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மீது 12 மணிநே... மேலும் பார்க்க

அமித் ஷாவுடன் சி.வி.சண்முகம், நிர்மலா சீதாராமனுடன் தம்பிதுரை சந்திப்பு!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும் கட்சியின் மூத்த நிர்வாகியுமான தம்பிதுரை புதன்கிழமை இரவு சந்தித்து ஆலோசனை நடத்தினார்.அதேபோல், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக மா... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 19 மாவட்டங்களில் மழை!

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக, அடுத்த... மேலும் பார்க்க

கிரீமிலேயா் வரம்பை ரூ.16 லட்சமாக உயா்த்த வேண்டும்: ராமதாஸ்

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கிரீமிலேயா் வரம்பை ரூ.16 லட்சமாக உயா்த்த வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசின் க... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும் -பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று பிரதமரை முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக, அவா் புதன்கிழமை எழுதிய கடிதம்: இந்திய அரசமைப்புச் சட்டம் ஒவ்வொரு குடி... மேலும் பார்க்க