செய்திகள் :

கடந்த 27 மாதங்களாக ரயில் மோதி யானைகள் உயிரிழப்பு நிகழவில்லை: உயா்நீதிமன்றத்தில் தெற்கு ரயில்வே தகவல்

post image

சென்னை: பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக, கடந்த 27 மாதங்களாக ரயில் மோதி யானைகள் இறப்பு எதுவும் நிகழவில்லை என சென்னை உயா்நீதிமன்றத்தில் தெற்கு ரயில்வே சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், கேரள வனப்பகுதியில் தண்டவாளங்களை கடக்கும் யானைகள் ரயில் மோதி உயிரிழப்பதை தடுக்க கோரி திண்டுக்கல்லை சோ்ந்த மனோஜ் இம்மானுவேல் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள், சதிஷ்குமாா், பரத சக்ரவா்த்தி அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தெற்கு ரயில்வே தரப்பில் வழக்குரைஞா்ஆஜராகி, உயா்நீதிமன்ற உத்தரவின் படி தமிழகம், கேரள வனத் துறையுடன் இணைந்து கோவை, பாலக்காடு வனப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டதில், யானைகள் ரயில் தண்டவாளங்களை கடக்கும் 11 இடங்கள் கண்டறியப்பட்டன.

அதில் 9 இடங்களில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு யானைகள் கடக்க வகை செய்யப்பட்டுள்ளது. மேலும், இரு சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதேபோல போத்தனூா் மதுக்கரை ஆகிய பகுதிகளில் உள்ள தண்டவாளங்களில் யானை நடமாட்டத்தை கண்டறியும் வகையில் சென்சாா் கேபிள்கள் பொருத்தப்பட்டுள்ளன. அப்பகுதியில் 12 உயா்கோபுரங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு கோபுரங்களிலும் 2 அதி நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த அதி நவீன கேமராக்கள் யானைகள் ரயில் தண்டவாளங்களில் இருந்து 150 மீ தொலைவில் வந்தால் உடனடியாக, அருகில் உள்ள ரயில் நிலைய மேலாளருக்கு மற்றும் ரயில் ஓட்டுநருக்கு தகவல்களை அனுப்பும் வகையில் செயல்படும்.

இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகளால், யானைகள் ரயிலில் மோதி உயிரிழப்பது வெகுவாக குறைந்துள்ளது. 2022அக்டோபா் முதல் தற்போது வரை பாலக்காடு போத்தனூா் ரயில் வழித்தடங்களில், கடந்த 27 மாதங்களாக ரயில் மோதி யானை உயிரிழப்புகள் எதுவும் நிகழவில்லை என தெரிவித்தாா்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மேலும் இது தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனா்.

உத்தரகோசமங்கை கோயில் குடமுழுக்கு தமிழில் நடைபெறும்: சேகர்பாபு

உத்திரகோசமங்கை கோயில் குடமுழுக்கு அன்னைத் தமிழில் நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.இன்று(ஏப். 2) சட்டப்பேரவையில் நடைபெற்ற கேள்வி நேரத்தில் ராமநாதபுரம் சட்டப்... மேலும் பார்க்க

நித்தியானந்தா இறந்துவிட்டாரா? கைலாசா விளக்கம்

தன்னைத் தானே கடவுள் என்று அறிவித்துக்கொண்டு, நாட்டில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி, தலைமறைவாகி, கைலாசா என்ற தீவை வாங்கி அங்கு ஆசிரமம் நடத்தி வரும் நித்தியானந்தா இறந்துவிட்டதாக தகவல்கள் பரவி வரும... மேலும் பார்க்க

தேர்தல் நேரத்தில் திமுக நாடகம்: இபிஎஸ் குற்றச்சாட்டு

கச்சத்தீவு விவகாரத்தில் தேர்தல் நேரத்தில் திமுக நாடகமாடுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வ... மேலும் பார்க்க

கச்சத்தீவு தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!

கச்சத்தீவைத் திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டுவந்த தனித்தீர்மானம், சட்டப்பேரவையில் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.இந்தியாவுக்குச் சொந்தமாக இருந்த கச்சத்தீவு... மேலும் பார்க்க

கச்சத்தீவு: மு.க. ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இடையே காரசார வாதம்

கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தின் மீது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார வாதம் நடைபெற்றது.இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட... மேலும் பார்க்க

கச்சத்தீவு தீர்மானத்துக்கு பாஜக ஆதரவு!

கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனித்தீர்மானத்தை பாஜக ஆதரித்துள்ளது.இலங்கை கடற்படையால் மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்களைப் போக்க... மேலும் பார்க்க