எல் கிளாசிக்கோ உறுதி: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பார்சிலோனா!
கச்சத்தீவு தீர்மானத்துக்கு பாஜக ஆதரவு!
கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனித்தீர்மானத்தை பாஜக ஆதரித்துள்ளது.
இலங்கை கடற்படையால் மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்களைப் போக்கிட கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வாக அமையும் என்றும் இந்தியா – இலங்கை ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து கச்சத்தீவை திரும்பப்பெறவும் மத்திய அரசை வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தீர்மானம் கொண்டுவந்தார்.
இந்த தீர்மானத்தின் மீது நடத்தப்பட்ட விவாதத்தில் கலந்துகொண்டு அனைத்துக் கட்சிகளின் எம்எல்ஏக்களும் தங்களின் நிலைபாட்டை தெரிவித்து பேசினர்.
அப்போது தீர்மானத்தை ஆதரித்து பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசினார்.
”கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்ட நாள்முதலே அது தவறென்று பாஜக கூறி வருகிறது. வரலாற்று தவறை பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே சரிசெய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.