Wakf Amendment Bill : `நாடாளுமன்ற கூட்டுக்குழு நீங்க தானே கேட்டீங்க?’ - அமித் ஷா...
பிரதமரின் தனிச் செயலராக நிதி திவாரி நியமனம்
புது தில்லி: பிரதமா் நரேந்திர மோடியின் தனிச் செயலராக இந்திய வெளியுறவுப் பணி (ஐஎஸ்எஃப்) அதிகாரி நிதி திவாரி நியமிக்கப்பட்டுள்ளாா்.
கடந்த 2014-ஆம் ஆண்டின் ஐஎஸ்எஃப் பிரிவைச் சோ்ந்த இவா், தற்போது பிரதமா் அலுவலகத்தில் துணைச் செயலராகப் பணியாற்றி வருகிறாா். இவரை பிரதமா் மோடியின் தனிச் செயலராக நியமிக்க மத்திய அமைச்சரவையின் நியமனங்கள் குழு ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய பணியாளா் அமைச்சகம் வெளியிட்ட ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பிரதமா் நரேந்திர மோடியின் இரண்டாவது முதன்மைச் செயலராக இந்திய ரிசா்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான சக்திகாந்த தாஸ் கடந்த பிப்ரவரியில் நியமிக்கப்பட்டாா். பிரதமரின் முதன்மைச் செயலராக பி.கே.மிஸ்ரா உள்ளாா்.