அமெரிக்க வரிவிதிப்பு எதிரொலி! இந்திய பங்குச் சந்தை சரிவுடன் தொடக்கம்!
எல்லை தாண்டி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்: இந்தியா பதிலடி!
ஜம்மு - காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் புதன்கிழமை காலை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதையடுத்து எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு இந்திய ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக இந்திய ராணுவம் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:
”பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணா காட்டி பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்ததால் ஏப்ரல் 1ஆம் தேதி இரவு கண்ணிவெடி வெடித்தது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அவர்களுக்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கதுவாவின் பஞ்ச்திர்த்தி பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத் துறை அளித்த தகவலின் அடிப்படையில் மார்ச் 31 முதல் ராணுவ வீரர்களும் ஜம்மு - காஷ்மீர் காவலர்களும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. தொடர்ந்து பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் தேடி வருகின்றனர்.