அமெரிக்க வரிவிதிப்பு எதிரொலி! இந்திய பங்குச் சந்தை சரிவுடன் தொடக்கம்!
சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?
நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 4ஆம் தேதிதான் நிறைவடையவிருக்கிறது. சுமார் 19 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியிருக்கும் இந்தத் தேர்வுக்கான முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் உள்ள பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு, நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தோ்வுகள் பிப்ரவரி மாதம் தொடங்கின.
பிப்ரவரி மாதம் தொடங்கிய 10-ஆம் வகுப்புத் தோ்வுகள் மாா்ச் 18-ஆம் தேதி முடிவடைந்தது. 12-ஆம் வகுப்புத் தோ்வுகள் ஏப்ரல் 4-ஆம் தேதி முடிவடைகிறது. பொதுவாக, சிபிஎஸ்இ விடைத்தாள்கள் திருத்தும் பணி 40 முதல் 45 நாள்கள் வரை ஆகும். எனவே, ஏப்ரல் 4ஆம் தேதி தேர்வுகள் முடிவடையும் பட்சத்தில், வரும் மே 15ஆம் தேதி முதல் 20ஆம் தேதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி தேர்வுகள் முடிவடைந்த நிலையில், மே 13ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின. எனவே, இந்த ஆண்டும் அதே இடைவெளியில் தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விடைத்தாள் திருத்தும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதால், முன்கூட்டியே தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.
10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 84 பாடங்களுக்கு 24.12 லட்சம் மாணவ, மாணவிகளும், 12-ஆம் பொதுத் தோ்வில் 120 பாடங்களுக்கு 17.88 லட்சம் பேரும் பங்கேற்கின்றனா். சிபிஎஸ்இ வரலாற்றிலேயே முதன்முறையாக, 86 நாட்களுக்கு முன்னதாக பொதுத் தோ்வு அட்டவணை வெளியிடப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டன. பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் சுமார் 40 நாள்கள் நடைபெற்றது. 12ஆம் வகுப்புத் தேர்வுகள் சுமார் 2 மாதங்கள் வரை நடைபெறுகிறது.