`அதிமுக-வை அழிவை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி!' - ஆ.ரா...
64 ஆண்டுகளுக்குப் பிறகுப் பேரப்பிள்ளைகள் நடத்தி வைத்த திருமணம்; நெகிழ வைக்கும் குஜராத் ஜோடி!
64 ஆண்டுகளுக்கு முன்பே குஜராத்தைச் சேர்ந்த ஒரு ஜோடி காதலித்து வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்து இருக்கிறது.
64 ஆண்டுகளுக்கு முன்பு காதல் என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது. ஆனால் அப்படிப்பட்ட காலத்தில் ஹர்ஷ் என்பவர் வேறு மதத்தைச் சேர்ந்த மிருனு என்ற பெண்ணைக் காதலித்து வந்தார்.
இருவரும் காதல் கடிதம் மூலம் தங்களது காதலை வளர்த்துக்கொண்டனர். ஆனால் அவர்களது காதலுக்கு இரு வீட்டிலும் சம்மதிக்கவில்லை.
இதையடுத்து மிருனு தனது தோழியிடம் ஒரு கடிதத்தை எழுதி இதைத் தனது பெற்றோரிடம் கொடுத்துவிடும்படி கூறிவிட்டு, வீட்டை விட்டு வெளியேறி விட்டார். அக்கடிதத்தில் இனி வரமாட்டேன் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஹர்ஷும் மிருனும் வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழ்க்கையைத் தொடங்கினர். 1960களில் இது நடந்தது. உறவினர்களை அழைத்து திருமணம் செய்ய முடியவில்லையே என்ற மணக் கவலை மட்டும் அவர்களிடம் இருந்து கொண்டே இருந்தது.

இப்போது அவர்களுக்குப் பிள்ளைகள், பேரக்குழந்தைகள் இருக்கின்றனர். இருவருக்கும் அனைத்து உறவினர்களையும் அழைத்து மீண்டும் திருமணம் செய்து வைக்கவேண்டும் என்று அவர்களின் குழந்தைகள் முடிவு செய்தனர்.
இதற்காகக் குஜராத்தில் பிரம்மாண்ட விழாவிற்கு ஹர்ஷ் பிள்ளைகள் ஏற்பாடு செய்திருந்தனர். இருவரது குடும்பத்தினரையும் திருமணத்திற்கு அழைத்திருந்தனர்.
உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்தபோது அவர்கள் மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். அவர்களின் திருமணப் புகைப்படங்கள், காணொளிகளைச் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். அவை வைரலானது.
அதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் திருமண தம்பதிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். ஒருவர் எழுதிய பதிவில்,

இதற்கு தற்போது திருமணம் செய்த இருவரின் கதை ஒரு அழகான நினைவூட்டல். சவால்களை எதிர்கொண்டாலும், உண்மையான காதல் நிலையானது உண்மையான காதல் மங்காது. என்ன நடந்தாலும் அது காலப்போக்கில் வலுவடைகிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.
திருமணம் செய்தவர்களில் ஒருவர் ஜெயின் மதத்தைச் சேர்ந்தவர். மற்றொருவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...