பிறை தென்பட்டது! நாளை ரமலான் பண்டிகை - தலைமை காஜி அறிவிப்பு
பிறை தென்பட்டதால் தமிழ்நாடு முழுவதும் நாளை (மார்ச் 31) ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஹிஜ்ரி 1446 ரமலான் மாதம் 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, ஆங்கில மாதம் மார்ச் 30 ஆம் தேதி அன்று மாலை ஷவ்வால் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் தென்பட்டது.
ஆகையால், திங்கள்கிழமை நாளை ( மார்ச் 31) ஷவ்வால் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் நாளை ரமலான் கொண்டாடப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சில அரபு நாடுகளில், இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், நாடு முழுவதும் நாளை ரமலான் கொண்டாடப்படவுள்ளது.
இதையும் படிக்க | 1-5ஆம் வகுப்புகளுக்கு முன்கூட்டியே தேர்வு