செய்திகள் :

DC vs SRH: `5 விக்கெட் மாமே!' - தடுமாறி சுருண்ட ஹைதராபாத்; மிரட்டிய டெல்லி கேப்பிடல்ஸ்

post image

இன்றைய ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய அணிகள் களமிறங்கின. இன்று பிற்பகல் 3:30 மணிக்கு விசாகப்பட்டினம் மைதானத்தில் இந்த போட்டி தொடங்கியது. இன்றைய போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார்.

DC vs SRH
DC vs SRH

ஹைதராபாத் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரில் இரண்டாவது பந்தில் ஒரு பௌண்டரியுடன் தனது ஆட்டத்தை தொடங்கினார் டிராவிஸ் ஹெட். முதல் ஓவரில் பந்து வீசிய மிட்செல் ஸ்டார்க், அபிஷேக் ஷர்மாவின் விக்கெட்டை எடுத்தார்.

அதன் பிறகு களமிறங்கிய இஷான் கிஷன் ஐந்து பந்துகளில் இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்து மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்தில் கேட்ச் அவுட் ஆனார். அதன் பிறகு களம் இறங்கிய நித்திஷ் ரெட்டி ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். இவ்வாறு அடுத்தடுத்த விக்கெட் இழப்பினால் மூன்று ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழந்து 29 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது ஹைதராபாத் அணி. தொடக்கத்திலிருந்து ட்ராவிஸ் ஹெட் விக்கெட்டை எடுக்க முயற்சி செய்து வந்தது டெல்லி கேப்பிட்டல். ஐந்தாவது ஓவரில் முதல் பந்தில் மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்தில் கேட்ச் அவுட் ஆனார் டிராவிஸ் ஹெட்.

DC vs SRH
DC vs SRH

அவர் 12 பந்துகளில் 22 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். அதன் பிறகு களம் இறங்கிய க்ளாசென் நின்று விளையாடத் தொடங்கினார். அனிகேட் வெர்மா உடன் க்ளாசென் பார்ட்னர்ஷிப் அமைத்து ஹைதராபாத் அணியின் ரன் குவிப்பிற்கு உதவினார். ஏழாவது ஓவரில் ஒரு போர், ஒரு சிக்ஸ், எட்டாவது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் என அனிகேட் வெர்மா சிறப்பாக தனது ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

11வது ஓவரில் மோகித் ஷர்மா வீசிய பந்தில் க்ளாசென் கேட்ச் அவுட் ஆனார். அவர் இரண்டு சிக்ஸ், இரண்டு பௌண்டரி என 19 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அதன்பிறகு பேட்டிங்கில் களம் இறங்கிய அபினவ் மனோகர், ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். ஹைதராபாத் அணி இம்பேக்ட் பிளேயாராக வியான் முல்டரை 15வது ஓவரில் களம் இறக்கியது. 16வது ஓவரில் குல்தீப் யாதவ் வீசிய பந்தில் அனிகேட் வெர்மா கேட்ச் அவுட் ஆனார்.

DC vs SRH
DC vs SRH

அனிகேட் வெர்மா அடித்த பந்தை பௌண்டரி லைனில் இருந்து தாவி பிடித்து அவுட் செய்தார் ஜேக் பிரேசர். அனிகேட் வெர்மா ஐந்து பௌண்டரி, ஆறு சிக்ஸர்கள் என 41 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து சிறப்பாக தன்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன் பிறகு விளையாடிய முல்டர், அர்ஷல் படேல் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். 19வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ரன்கள் மட்டுமே எடுத்தது ஹைதராபாத் அணி. மிட்ஷல் ஸ்டார்க் சிறப்பாக பந்துவீசி ஹைதராபாத் பிளேயர்களின் விக்கட்டுகளை எடுத்துள்ளார். இந்த போட்டியில் ஹைதராபாத் அணியின் ஐந்து முக்கிய விக்கெட்டுகளை எடுத்து அசத்தி உள்ளார்.

164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கில் களம் இறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ மேன்களாக பிரேசர்-மெக்கர்க் மற்றும் பாப் டூபிளெஸ்ஸி ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரில் தலா ஒரு ரன் மட்டுமே எடுத்த பாப் டூ பிளெஸ்ஸி, பிரேசர்-மெக்கர்க், அடுத்தடுத்த ஓவர்களில் சிறப்பாக விளையாட தொடங்கினர். மூன்றாவது ஓவரில் ஒரு சிக்ஸ், மூன்று பௌண்டரிகள் என சிறப்பாக தன்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தினார் பாப் டூபிளெஸ்ஸி.

DC vs SRH
DC vs SRH

ஐந்தாவது ஓவரில் பிரேசர்-மெக்கர்க் அடித்த பந்தை கேட்ச் பிடிக்கத் தவறவிட்டார் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ். பவர் பிளேவின் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 52 ரன்கள் எடுத்திருந்தது. ஏழாவது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் என அடுத்தடுத்து விலாசினார் பாப் டூபிளெஸ்ஸி. பத்தாவது ஓவரில் ஜீசன் அன்சாரி வீசிய பந்தில் கேட்ச் அவுட் ஆனார் பாப் டூபிளெஸ்ஸி. அவர் மூன்று பவுண்டரிகள், மூன்று சிக்ஸர்கள் என 27 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து கேட்ச் அவுட் ஆனார். பத்தாவது ஓவரில் ஜீசன் அன்சாரி வீசிய பந்தை இரண்டு பவுண்டரிகள், ஒரு சிக்சர் என விலாசி கொண்டிருந்தார் பிரேசர்-மெக்கர்க்.

அடுத்த பந்தில் பவுலிங் செய்த ஜீசன் அன்சாரி பிரேசர்-மெக்கர்க் அடித்த பந்தை பிடித்து அவுட் ஆக்கினார். அதன்பிறகு பேட்டிங்கில் களம் இறங்கிய கே எல் ராகுல் முதல் பந்திலேயே பௌண்டரி, சிக்ஸ், பௌண்டரி என விளாசினார். 12 வது ஓவரில் ஜீசன் அன்சாரி வீசிய பந்தில் கேட்ச் அவுட் ஆனார் கே எல் ராகுல். அதன் பிறகு பேட்டிங்கில் களம் இறங்கிய ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 15 ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்திருந்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்.

DC vs SRH
DC vs SRH

16வது ஓவரில் ஸ்டெப்ஸ் இரண்டு போர் அடிக்க, அபிஷேக் பொரெல் சிக்ஸ் அடித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வெற்றி பெறச் செய்துள்ளார். 16 ஓவர் முடிவில் 166 ரன்கள் எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி பெற்றது. ஹைதராபாத் அணி இன்றைய போட்டியில் பேட்டிங்கிலும், பில்டிங்கிலும் வழக்கமாக இருந்ததைவிட சற்று தடுமாறியது.

MI vs KKR: "அஸ்வனி குமாரின் அந்த விக்கெட் மிக முக்கியமானது" - வெற்றிக்குப் பின்னர் ஹர்திக் பாண்டியா

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று (மார்ச் 31) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கியது மும்பை. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா, முதல... மேலும் பார்க்க

MI vs KKR: `எங்கள் தோல்விக்கு இதுதான் காரணம்' - விளக்கும் கொல்கத்தா கேப்டன் ரஹானே

கொல்கத்தா அணிக்கும் மும்பை அணிக்கும் நேற்று (மார்ச் 31) நடைபெற்ற போட்டியில், மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. முதலில் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்த மும்பை அணி, 16.2 ஓவர்களில் ... மேலும் பார்க்க

Ashwani Kumar: பஞ்சாப் தவறவிட்ட மாணிக்கம்; பட்டை தீட்டிய பல்தான்ஸ்; யார் இந்த அஸ்வனி குமார்?

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று (மார்ச் 31) நடைபெற்ற போட்டியில், கொல்கத்தாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த சீசனில் தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கியது மும்பை. இந்தப் போட்டியின் மூலம் ஐபிஎ... மேலும் பார்க்க

Ashwani Kumar: "கடின உழைப்பால் இங்கு நிற்கிறேன்" - MI vs KKR போட்டி ஆட்டநாயகன் அஸ்வனி குமார்

மும்பை vs கொல்கத்தா ஐபிஎல் போட்டி வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று (மார்ச் 31) நடைபெற்றது. இதில், டாஸ் வெனறு பவுலிங்கைத் தேர்வு செய்த ஹர்திக் பாண்டியா & கோ, கொல்கத்தாவை 16.2 ஓவர்களில் 116 ரன்களுக்குச்... மேலும் பார்க்க

MI vs KKR: கொல்கத்தாவை வாரிச் சுருட்டிய 23 வயது அறிமுக பவுலர்; வெற்றிக் கணக்கைத் தொடங்கிய மும்பை

ஐபிஎல் 18-வது சீசனில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்பில் மும்பை (MI) அணியும், கடந்த போட்டியின் வெற்றியை இந்தப் போட்டியிலும் தொடர வேண்டும் என்ற நோக்கில் கொல்கத்தாவும் (KKR) வான்கடே மைதானத்... மேலும் பார்க்க

RCB: `இனிமேல் இதுல நாங்கள்தான் நம்பர் 1' - சிஎஸ்கே-வை ஓரங்கட்டி ஆர்சிபி சாதனை

ஐபிஎல் 18-வது சீசன் கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. இதில், 17 சீசன்களாக சாம்பியன் பட்டம் வெல்லாத ஆர்.சி.பி அணி இந்த முறை நிச்சயம் கோப்பையை வெல்ல வேண்டும் என புதிய கேப்டனுடன் களமிறங்கியிருக்கிறது.பிலிப் ச... மேலும் பார்க்க